3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்!
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து மூன்றாவது ஆண்டாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உம்அல்ஹசம் பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இப்போட்டி நடைபெற்றது.

சுமார் நூறு குழந்தைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் குழந்தைகள் சிறிய மற்றும் பெரிய என்ற வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தலா மூன்று குழந்தைகளுக்கும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் லதா சக்திவேல் நடுவராக செயல்பட்டார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில்குமார், பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நியூ இந்தியன் பள்ளியின் முதல்வர் கோபிநாத் மேனன், ஊடகவியலாளர் பிரதீப், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி அனஸ் பசீர், மருத்துவர் ரவி ஸ்ரீநிவாசன், சந்தைப்படுத்தும் அதிகாரி ராமீஸ் முகமது ஆகியோரை செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தனர்.

நிகழ்ச்சி பொறுப்பாளரான சங்க ஊடகத்துறை செயலாளர் செ. மதன்குமார் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தனர். அவர் பேசும்போது "நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உலகம் மட்டுமே, இன்று அனைத்து நாடுகளும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெப்பமயமாதல், அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது" என்று கூறினார். இத்தகைய ஆரோக்கியமான செயல்களுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications