தமிழர் கலை பண்பாட்டு விருந்துடன் கலக்கப் போகும் ஃபெட்னா 2017!
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30வது பேரவைத் தமிழ் விழா அமெரிக்காவின் மினசோட்டா நகரின் மினபொலிஸ் கன்வென்சன் சென்டரில் இம்மாதம் 30 ம் தேதி தொடங்குகிறது. உலகத்தமிழர்கள் சங்கமிக்கும் இந்தவிழாவில் தமிழர் சிறப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும்வகையில் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஃபெட்னா தமிழ் விழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், 'தமிழர் கலையைப் போற்றிடுவோம் தமிழர் மரபை மீட்டெடுப்போம்' என்ற முழக்கத்துடன் நடக்கவுள்ளது. அந்த விழாவில் ஜூலை மாதம் 1, 2 ம் தேதிகளில் தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஜூலை 1ம் தேதி 'மருத நாயகம்' மரபு நாடகம் நடக்கிறது. நாடக வடிவம் இயக்கம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜூ. இசை முருகவேல்.கதை மூலம் நா.வானமாமலை.
ஜூலை 2ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஜெயமூர்த்தி, அருண் ராஜா, நிரஞ்சனா, ராஜகணபதி, ஸ்ரதா ஆகியோர் பங்கேற்று இசைப்பாடல்கள் வழங்கவுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி ஜூலை 1ம் தேதி நிகழ்வுள்ளது. இதில், புதுவை சித்தன் ஜெயமூர்த்தி, ராமச்சந்திரன், சிலம்பரசன், சக்தி ஆகியோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி வழங்கவுள்ளனர்.
தமிழர் கலை பண்பாட்டு விருந்துடன் கலக்கப் போகும் ஃபெட்னா 2017! pic.twitter.com/BhYrKrnWP2
— Oneindia Tamil (@thatsTamil) June 7, 2017


Click it and Unblock the Notifications
