For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜாவில் முதல்முறையாக பிரான்ஸ் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் பிரான்ஸ் நாட்டு கட்டுமானப் பொருட்கள் குறித்த கண்காட்சி நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கண்காட்சி வரும் நவம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்த ஒப்பந்தத்தில் ஷார்ஜா எக்ஸ்போ செண்டரின் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல்மித்பா மற்றும் ஜி.எல். இவெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் பெனாய்ட் பெய்லியர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

France construction items expo in Sharjah

இது குறித்து சைப் முகம்மது அல்மித்பா கூறுகையில்,

இது போன்ற கண்காட்சி அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற இருக்கிறது. அதிகரித்து வரும் சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இந்த கண்காட்சி மூலம் குறிப்பாக கட்டிடக்கலை வடிவமைப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கண்காட்சி இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இதன் மூலம் அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பிரான்ஸ் நாட்டு கட்டுமானப் பொருட்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜி.எல். இவெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் பெனாய்ட் பெய்லியருக்கு ஷார்ஜா எக்ஸ்போ செண்டரின் சார்பில் நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்போ செண்டர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

English summary
France construction items expo will be held in Sharjah on November 22 and 23rd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X