கட்டம் போட்ட கலர்ச் சட்டைன்னா உங்களுக்கு ரெம்பப் பிடிக்குமா...??
சென்னை: சட்டை போடுவதில் என்னய்யா ஸ்டைல் இருக்கு, பேஷன் இருக்கு என்று சிலர் அலுத்துக் கொள்ளலாம். இருக்குதாம்.. அதுவும் கட்டம் போட்ட சட்டையைப் போடுவதாக இருந்தால் எப்படிப் போட்டால் எடுப்பாக இருக்கும் என்று பேஷன் பண்டிட்டுகள் சொல்லி வைத்துள்ளனர்.
கலர் கலரான கட்டம் போட்ட சட்டைகள் ஒரு காலத்தில் தமிழகத்தையே கலக்கி வந்தன. பின்னர் இது மாறி டிசைன் டிசைனாக போட ஆரம்பித்தனர்.
கட்டம் போட்ட சட்டைகளை கேலி செய்த காலமும் உண்டு. ஆனால் இப்போது கட்டம் போட்ட சட்டைகளையும் பலர் மீண்டும் எடுத்து உடுத்த ஆரம்பித்துள்ளனர்.

சட்டைன்னாலே..
சட்டை என்றாலே அது பார்மல் டிரஸ்ஸாகி விட்டது. குறிப்பாக அலுவலகம் செல்வோர், திங்கள் முதல் வியாழன் வரை டீக்காக சட்டை, பேன்ட் போட்டு, ஷூ மாட்டி ஜம்மென்று போவது வழக்கம், அலுவலக சம்பிரதாயமும் கூட.

கட்டம் போட்ட சட்டை
அதிலும் கட்டம் போட்ட சட்டைகள் போட்டால் இன்னும் டாப்பாக காட்சி தரலாம்- போடும் வகையில் போட்டால்.

சரியான சட்டைபோடாவிட்டால்
கட்டம் போட்ட சட்டையாக இருந்தால் சரியான கலரில், சரியான விதத்தில் இருந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் உங்களை எல்லோரும் காமெடி பீஸ் போல பார்க்கும் ஏற்பட்டு விடும்.

பாக்கெட் அவசியமா...
சட்டை என்றாலே பாக்கெட் இல்லாமல் இருக்காது. அதேசமயம், ஒல்லியாக இருப்பவர்களுக்குத்தான் இந்த பாக்கெட் சரியாக இருக்கும். குண்டான உடல் வாகு கொண்டவர்களுக்கு சட்டையில் பாக்கெட் இல்லாமல் இருந்தால்தான் பார்க்க நன்றாக இருக்கும்.

உடம்புக்குப் பொருத்தமா இருக்கா
கட்டம் போட்ட சட்டை எல்லோருக்கும் பொருந்தும் என்று கூறி விட முடியாது. சிலருக்கு அதாவது குண்டான உடல் வாகு கொண்டவர்களுக்கு உடம்பை மேலும் பெருக்கிக் காட்டும் வகையில் கட்டம் போட்ட சட்டை அமைந்து விடுகிறதாம். அப்படிப் பட்டவர்கள் சற்று கவனமுடன் இருந்தால் நல்லதுதான்.

கலர் காடியா இருக்காம பாத்துக்குங்க
சிலர் காடியான கலரில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கண்களைப் பறிக்க வைப்பார்கள். அதை விடுத்து மெல்லிய கலரில், கண்ணுக்குக் குளிர்ச்சியான கலரில் அமைந்த சட்டையை செலக்ட் செய்து போட்டீங்கன்னா.. ஜம்முன்னு இருப்பீங்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications