ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் புயல் நிவாரண நிதி திரட்டு விழா
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் இளைஞர்கள் கழகம் சார்பில் ஆர்வே நிவாரண நிதி திரட்டு விழா நடைபெற்றது.
அமெரிக்காவை உலுக்கிய ஆர்வே புயலை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட மூன்று வாரமாக கடுமையான புயல் ஹூஸ்டனை தாக்கியது. இந்த புயல் பாதிப்புக்குத் தேவையான நிவாரண நிதியை சேகரிக்க ஒரு நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடைபெற்றது.

உயர்நிலை பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து அவர்களது இசை திறமையை பயன்படுத்தி நிதி திரட்டு விழா ஒன்றை திட்டமிட்டனர். இவ்விழா ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது. தமிழ் சமுதாயம் இவர்களது முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மிகுந்த உற்சாகம் அளித்து 6000 டாலர்கள் நிதி திரட்ட உதவி செய்தனர்.

சேன்ட்ரா என்னும் 8 வயது சிறுமி சேமித்து வைத்த பணத்தை நிதியாக கொடுத்தது அனைவரின் பாராட்டை பெற்றார். ஆதி கோபால், கிஷோர் ஐயர், நாகஸ்ரீ நிதி ஆகியோர் இரண்டு மணி நேர கர்நாடக சங்கீத நிகழ்ச்சியை நடத்தினர். அமைப்பின் தலைவர் நாராயணன் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றி பாராட்டினார். கோயில் போர்டு உறுப்பினரான அருண் சுந்தர் திருக்கோயிலின் சார்பாக திரட்டப்பட்ட நிதியை பெற்றுக் கொண்டார்.
மூத்தவர்கள் டாக்டர் அப்பன் மற்றும் அனந்தா அய்யர் அவர்கள் மற்ற நலம் கருதுவோறுடண் விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழா ஆதி கோபால் பங்கேற்பினரைப் வரவேற்புரையுடன் மற்றும் தொடர்ப் பாடலுடன் தொடங்கினார், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா எழுதிய பிருந்தாவன தில்லானா தொடர்களை பாடினார். கிஷோர் அய்யர் சூரியகாந்தம் ராகத்தை வயலின் இசையில் வாசித்து சூரிய பகவானின் அருளை வேண்டினார்.

நாகஸ்ரீ நிதிதணி அவர் தணத்திலிருந்து கந்ததிரிப்புடா தாளம் மூலமாக பார்வையாளர்களை கவர்ந்தார்.
இம் மூன்று கலைஞர்களின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் அனைவர்க்கும் நன்றி பாராட்டுகள தெரிவித்தனர். இவ் விழா அடுத்த தலைமுறையினருக்கு மிகுந்த ஆர்வத்தை கூட்டியது.
செய்தி: மாலா கோபால்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications