அபுதாபியில் இஃப்தார் பெருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு!

அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: லால்பேட்டை ஜமாஅத் இஃப்தார் பெருவிழா கடந்த வியாழக் கிழமை பேரெழுச்சியோடு நடைபெற்றது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஜெ. யாசர் அரபாத் அலி தலைமை வகித்தார். மெளலவி இம்ரானுல்லாஹ் பிலாலி கிராஅத் ஓதினார்.

Iftar celebration held in Abu Dhabi

ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.சிராஜுல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி துவக்கவுரை நிகழ்த்தினார்.

சமுதாயப் புரவலர்கள் சாதனைத் தமிழர் நோபிள் ஷாஹுல் ஹமீத், இனியாஸ் அப்துல் ஹமீது மரைக்காயர்,
அய்மான் சங்க தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி, பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,துபாய் ஈமான் துணைத் தலைவர் முஹம்மது மஃரூப், துபாய் லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஜெ.முஹம்மது மைதீன் இந்திய முஸ்லிம் பேரவை பொதுச் செயலாளர் மீரான், அபுதாபி தமிழ் சங்கத் தலைவர் ரெஜினால்டு, அமீரக தமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார், அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

Iftar celebration held in Abu Dhabi

ஜமாஅத் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மறைந்த முஃப்தி எஸ்ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்களுக்கு ஜமாஅத் சார்பில் இரங்கல் தீர்மானம் வாசித்தார். லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வாங்கப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதி பெற்றுத் தர முன்னாள் வக்ஃபு வாரியத் தலைவரிடம் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பிலான கோரிக்கையை செயலாளர் எல்.சாதிக் அலி வாசித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், முன்னாள் வக்ஃபு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி, சேலம் மதரஸாவின் முதல்வர் மெளலானா அபூதாஹிர் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். லால்பேட்டையில் இருந்து நியாஜ் அஹமத்,சிங்கப்பூரில் இருந்து இர்பானுல்லாஹ், டாக்டர். இக்ராமுல்லாஹ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

Iftar celebration held in Abu Dhabi

ஜமாஅத் பொருளாளர் ஹாஜி விஏ.அஹமது நன்றி கூற மௌலவி அப்துல் ரஷீது ஜமாலி துஆவுடன் நிறைவு பெற்றது. லால்பேட்டை மண்ணிற்கே உரிதான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் நிர்வாகிகள், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Iftar celebration held in Abu Dhabi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+