துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய இப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய இப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்ற குவைத் பள்ளியில் ரமலான் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த இப்தார் நிகழ்ச்சி துபாய் ப்ரிஜ்முரார் பகுதியில் அமைந்துள்ள லத்தீபா பள்ளிவாசல் மற்றும் துபாய் சலாஹுத்தீன் சாலையில் இருக்கும் ஈடிஏ அஸ்கான் பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்புச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் கும்பகோணம் சாதிக்கும், லத்திபா பள்ளிவாசலில் திண்டுக்கல் ஜமால் மைதீனும், ஈடிஏ அஸ்கான் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் தலைமையிலான குழுவினரும் மேற்பார்வை செய்து வருகின்றனர்.

தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் சுவைமிக்க நோன்புக் கஞ்சியை பருகி நோன்பு திறந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கேதசம், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications