சுதந்திரதின ஸ்பெஷல்: 15ம் தேதி துபாயில் நடக்கும் சிறப்புக் கவியரங்கம்
துபாய்: துபாயில் இந்திய சுதந்திரத்தினத்தை கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 அன்று காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.
விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஈடிஏ மெல்கோ நிறுவனத்தின் முன்னாள் பொதுமேலாளர் முதுவை ஹசன் அஹமது சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்துரைகளையும், சுதந்திரதின சிந்தனைகளையும் வழங்க உள்ளார்.
அமீரகத்தில் கவிதை மற்றும் பன்முகத் திறமைகள் கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர இக்கவியரங்க தளம் அமைத்துத் தருகிறது. மேலும் கவிதை மட்டுமல்லாது பல்வேறு திறமைகள் கொண்டவர்களும் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தலாம்.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 050 251 96 93 எனும் அலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். அமீரகத்துக்கு வெளியே வசிப்பவர்கள் தங்களது கவிதைகள் மற்றும் ஆக்கங்களை விடுதலை எனும் தலைப்பில் அனுப்பலாம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஆதிபழனி, திண்டுக்கல் ஜமால் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications