குவைத்தில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கிளை அறிமுக விழா
குவைத்: குவைத்தில் கடந்த 15-5-2015 அன்று இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் கிளைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மிர்காப்பில் உள்ள தஞ்சை ஹோட்டலிலும் அபுஹலிபா ஆலிவ் ஹாலிலும் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு துணை தலைவர் இப்ராஹிம் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் அம்ஜத் அலி அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு பொதுச் செயலாளர் சிக்கந்தர் பாஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் ஃபோரத்தின் கிளை நிர்வாகிகளை ஃபோரத்தின் தமிழ் பிரிவு செயலாளர் பொறியாளர் முஹம்மது அபூபக்கர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். சிட்டி மண்டல தலைவர் அப்துர் ரஹ்மான், செயலாளர் சாதிக், அப்பாசியா கிளை தலைவர் மன்சூர், செயலாளர் அப்துல் பாஷித், மிர்காப் கிளை தலைவர் அப்பாஸ், செயலாளர் சுல்தான், ஹவல்லி கிளை தலைவர் ஹசன், செயலாளர் அன்வர் பாஷா, ஜஹ்ரா கிளை தலைவர் சபருல்லாஹ், செயலாளர் பைசுல் அன்சாரி, பர்வானியா கிளை தலைவர் பைசல், செயலாளர் முஹம்மது ஜலீல் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு செயற்குழு உறுப்பினர் சாதிக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஃபோரத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications