செப்டம்பரில் புதுவையில் தமிழ் இணைய மாநாடு: கட்டுரைகள் அனுப்பலாம்

Subscribe to Oneindia Tamil

புதுவை: உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014-ஐ புதுவையில் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த உள்ளது.

உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தவிருக்கிறது.

மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான மாநாட்டு நிகழ்ச்சிக் குழுவிற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்று சேர்த்து, பரிசீலனை செய்து, தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் "தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு" முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• இயல்மொழிப் பகுப்பாய்வு - தமிழ்ச் சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி...) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்...
• கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
• திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
• கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.
• தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்
• தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்....
• தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை ஏ4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் ஜூன் 30ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ இருக்கலாம்.

மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு ஜூலை 31ம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும். கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பி வைக்க கேட்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.

மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்படவுள்ளது. இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள் உலகின் முக்கிய/பெரிய நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு
ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

13 ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான இறுதி நாட்கள்:
கட்டுரையின் ஆய்வுச் சுருக்கம் அனுப்ப : ஜூன் 30ம் தேதி
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்கள் பற்றிய அறிவுப்பு : ஜூலை 31ம் தேதி
முழுக்கட்டுரை அனுப்ப : ஆகஸ்ட் 30ம் தேதி
மாநாடு நடைபெறும் நாட்கள் : 19-21 செப்டம்பர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+