இது வீர விளையாட்டு கூட்டம்... அமெரிக்காவிலிருந்து ஒரு உணர்ச்சிக் கவிதை!
ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள கவிதை.
நிறத்தில் கருப்பென்ன, சிவப்பென்ன..
பண்டிகையில் வடக்கென்ன..தெற்கென்ன..
எட்டுதிக்கும் என் இனம்..!
எண்ணிலடங்கா மொழி கொண்ட என் நாட்டில்..
கடவுளும் வீரன்தான்..என் கண்ணில்.!
வேல் வைத்த முருகனும்...கார்த்திகேயனும்..
சூலம் ஏந்திய சிவனும்..
அம்பு வைத்த ராமனும்..
சிங்கம் தரித்த துர்க்கையும்..
சக்கரம் கொண்ட விஷ்ணுவும்..

இது...வீர விளையாட்டு கூட்டம்.!
இதில் வந்தது என் இனம்...!
இப்போது..
"ஏறு தழுவுதலை" மட்டும்
வீரத்தின் விழைதழலாய் ஏற்க மறுத்தல்ஏனோ.?!
முன்னது கடவுள் என்ற பயமா?
மனிதத்திலும் உள்ளது கடவுள்..!
வரலாற்றை புரட்டு...புரியும்.
"காந்தளூர்ச்சாலை" யும்..."கலிங்கத்துபரணி" யும்
கண்டெடுத்த சோழ வீரன்
விட்டுச் சென்றது - "பிரகதிஸ்வரர்ஆலயம்.!"
சங்கம் வளர்த்த தமிழ் காதலன் - பாண்டியன்
கடைந்து எடுத்தது - மதுரை மீனாட்சி..!
ஒன்றா..இரண்டா..!
வீரத்திற்கு இல்லை வடிவம்..!
எல்லையில் எதிரியை கொல்வது - வீரம்..!
எதிரியை எதிர்த்து கொல்லப்படுவதும் -வீரம்..!
அண்டம் கடந்த அறிவியல் தேடல் - வீரம்.!
"காந்தி" காதல் கொண்ட - அஹிம்சையும் - வீரம்..!
"ஹோலி" யும், "ரக்ஷபந்தன்" னும்
தேசிய பண்டிகை எனில்..
"பொங்கல்" மட்டும் போகியில்
போட்டுக் கொளுத்தவா?
விருப்ப கணக்கில் விடுப் புஎடுக்க...
மகளிருக்கு மட்டும் தரும் - பிரசவ விடுப்பா
பொங்கல் பண்டிகை.?!
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு..
நன்னூல்..."ஆற்றுப்படை" - இன்னும்..இன்னும்..
தமிழின் ஆதிமூலம் அறியாதவர்க்கு
"ஏறு தழுவுதல்" வரலாறு மட்டும்
புரியவா போகிறது?!
"உழவுக்கு வந்தனம் செய்வோம்"
என்ற வரி புரியவில்லை எனில்..
தமிழ் படிக்க கற்றுக்கொள்..!
உலக உருண்டையில் நம்மூத்தோர் தடத்தை
அது காட்டும்..!
"ஓடி விளையாடு"..."கூடி விளையாடு"
தெரிந்த செந்தமிழுக்கு..
"ரௌத்திரம்பழகு" நன்றாகவேதெரியும்..!
சட்டங்கள் இருப்பதும்...இயற்றுவதும்..
சந்தோசத்தின் வாசலை காண மட்டுமே..!
சங்கடங்கள் சங்கமிக்க அல்ல..!
ஆற்று வழி நாகரிகம் விட்டுச் சென்ற
வரலாறை போற்ற வேண்டாம்..!
புதைக்க புறப்படாதே..!
கழனி போற்று..
உழவன் போற்று..
விவசாயம் வணங்கு..!
- மாணிக்கம் விஜயபானு
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications