இன்று குருப்பெயர்ச்சி - கோடி நன்மை தரும் குரு பகவானின் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்
சென்னை: இன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் கடக ராசிக்குள் பிரவேசிக்கும் தருணத்தில், அனைத்து ராசிக்காரர்களும் தங்களுக்கேற்ற பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவக்கிரகத்தில் உள்ள குருவுக்கு சுண்டல், கடலை நெய்வேத்தியம் செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர் மாலை அல்லது முல்லைமலர் மாலை சாற்றலாம்.

தட்சிணாமூர்த்தி நெற்றியில் கஸ்தூரி பொட்டு வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களுக்கும் ஹோமம் வளர்த்து அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகத்தில் உள்ள குருவுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வதுபோல் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்பதால் அவருக்கு பூஜை வழிபாடு செய்யலாம்.
நவக்கிரகங்களில் குரு வுக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம் ஆகியவற்றை அங்கேயே தானம் செய்துவிட வேண்டும். வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்திக்கு செய்த அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகலாம்.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தட்சிணா மூர்த்திக்கு படம் வைத்து தீபம் ஏற்றி ஜெயபாராயணம் செய்யலாம். தட்சிணாமூர்த்தி படம், விக்கிரகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.
ஆனால் நவக்கிரக படங்களை வைத்து வழிபடக் கூடாது. சொல்லாலும், செயலாலும் பிறர்மனம் புண்படாதபடி நடந்து கொள்ளுங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். குரு பகவானின் அருள் பூரணமாக கிட்டும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications