Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரியல்லி யூ ஆர் கிரேட் மீனாட்சி".. (காகிதப் பூக்கள் - 12)

Subscribe to Oneindia Tamil

- லதா சரவணன்

"ரியல்லி யூ ஆர் கிரேட் மீனாட்சி..!" சமூக அக்கறைங்கறது, உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஸ்டிரைக் கோரிக்கையை ஏற்க வைக்க வன்முறை இவையெல்லாம் இல்லை. ஒரு விஷயத்தை எல்லோரிடமும் வெகு அற்புதமாய் கொண்டு சேர்த்து இருக்கிறீர்கள். இளம்பெண் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சனையை .....! பாராட்டுகிறேன்..! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!" என்றதோடு தன் சட்டைப் பையில் இருந்து விலையுர்ந்த பேனாவையும் தந்தான்.

"நன்றி ஸார்!" ஏனோ மைக்கின் முன்பு பொரிந்து தள்ளியவளுக்கு ஈஸ்வரின் முன் பேச்சே எழவில்லை. நன்றி கூட ரத்னா உசுப்பி விட்டதுதான். இல்லையெனில், அவள் சுயநினைவு அற்றுப் போய் இருந்தாள் என்பதே நிஜம். அவன் கைகளால் முதல் பரிசை வாங்கிய சந்தோஷம் மனம் முழுக்க பூரிப்பு, எத்தனையோ பேர் வந்து பாராட்டிய போதும், வாய் மட்டும் நன்றி சொன்னதே தவிர கண்கள் ஈஸ்வரையே மொய்த்தன.

Kakithapookkal, new story series

ஆடையைக் கலைக்கும் போதே ரத்னா கேட்டுவிட்டாள். "என்னடியிது? அத்தனை பெரிய மனிதர் உன்னைப் பாராட்டி இருக்கிறார்? ஒரு சின்ன நன்றியைக் கூட உன்னால் சொல்ல இயலவில்லையா? ஏண்டி முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? அவர் என்ன நினைப்பார்?!"

"அது வந்து.... ஏன்னு தெரியலை ரத்னா? என்னமோ அவரு என் கையைத் தொட்டதுமே அவரு கூட யுகம்யுகமாப் பழகினா மாதிரி இருந்தது.!"

"என்னடி சொல்றே ?"

"ரத்னா இதுவரையில் நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்னமோ தெரியலை ஈஸ்வரைக் கண்டதும்.?!"

"காதலா,,,?"

"ச்சே ! அதெல்லாம் இல்லை,,"

"என்ன இல்லை, அரை மயக்கம், எப்போதும் கணீரென்று பேசும் உன் குரலில் ஒரு குழைவு ! அவர் தந்த பரிசையும் பேனாவையும் நெஞ்சோடு அணைத்திருந்தாய்! பேக்கு மாதிரி அவர் நகரும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாய்.. இதைவிட வேறென்ன சான்று வேண்டும் ?"

"இதுதான் காதலா ?"

"வேறென்ன சொல்ல? எனக்கு அப்பவே தெரியுண்டீ?! கனவு இலட்சியமின்னு நீ சுத்தும்போதே நினைச்சேன் இப்படி தடாலடியாய் கவிழுவேன்னு ?!"

"கிண்டலா ?"

"சத்தியமா இல்லை.. நீ மட்டுமல்ல ஊரு உலகமே, ஏன் காக்கா குருவி கூடகாதலிக்கிறது. இன்று காதலர் பதிவேட்டில் உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது."

"விளையாடாதே ரத்னா....!"

"சீரியஸ்.,,,,,! ஈஸ்வர் நல்ல செலக்ஷன்தான்! அப்பப்போ நானும் அவரைப் பற்றி பத்திரிகையில் படிப்பது உண்டு, நல்ல மனிதர் முக்கியமா கறைபடியாத கைகள்."

"ரத்னா நான் இன்றுதான் அவரைப் பார்த்திருக்கேன். அவரிடம் ஏதோ இரண்டொரு வார்த்தை பேசியிருக்கேன் ஆனா...?!"

"எப்படி உன் காதலை வளர்க்கன்னு கேட்குறே? காலேஜ் போறது போல டெய்லி போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதுதான்.!"

"ஏய்?"

"வேற வழியில்லை மீனா அவறென்ன புரபஸரா,,,? காலேஜில் பார்க்க...? அர்ச்சகரா இல்லை ரோடுசைட் ரோமியோவா கோவிலிலோ அல்லது ரோட்டிலோ பார்க்க, அவர் ஒரு போலீஸ் அதிகாரி. அங்குதானே அவரைப் பார்க்க முடியும்?!

தோழியின் களையிழந்த முகம்தனைக் கண்டதும், கவலைப்படாதே மீனா ஈஸ்வர் பேசியதை எல்லாம் கவனிச்சியா? கனவு இலட்சியம் எல்லாம் துணை நிற்கும். மீனாட்சி போன்ற பெண்களைக் காணும்போது மனதிற்கு இதம் அளிக்கிறது. மேலும், ஆண்களே யோசிக்கும் ஒரு சமூகப்பிரச்சனையை அழகாய் கையில் எடுத்து அதன் காரணத்தையும் அவர்கள் படும் அவலத்தையும் அழகாய் ¨தைரியமாய் பேசிய அவர்களை என்னால் மறக்க முடியாது. இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமான எந்தவிதஉதவிகளையும நான் அவர்களுக்குச் செய்யத் தயாராய் இருக்கிறேன்."

"தோழியின் பேச்சில் மீண்டும் ஈஸ்வரின் நினைவு எழுந்தது. எத்தனை அழகு கம்பீரம், நேர்மை, கண்ணியம், ஆண்மையிலும் மென்மை!"

"என்னடி மறுபடியும் டிரீம் போயிட்டியா ?"

"ம்கூம்!"

"விடு மீனா...!" பிரண்டுங்கிற முறையில் உனக்கு சீரியஸா அட்வைஸ் பண்ணட்டுமா. என்ன என்பதுபோல் பார்த்தாள் மீனாட்சி., இது படிப்புக்காலம் நீ டீன் ஏஜைத் தாண்டி விட்டாலும் எல்லாமே நாம் உணர்ந்துவிடப் போவதில்லை, நம்ம வேவ்லைனில் ஒத்துப் போகும் சிலரைக் காணும்போது நம்மையும் அறியாமல், சிலநேரம் மனம் அசையும், கல்லையும் அசைத்துப்பார்க்கும் துணிவு காதலுக்கு உண்டு. இப்போ ஈஸ்வரைக் கண்டதும் உன் மனசில் ஒரு பிடிப்பு உண்டாயிருக்கு, அதுக்கு காரணம் ஈர்ப்பாக்கூட இருக்கலாம். இல்லை அவருடைய அழகு, கம்பீரம், எல்லாரும் சர்ச்சைன்னு சொன்ன உன் முயற்சியை பாராட்டிய குணமாக் கூட இந்த ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்."

"ஏதோ ஒரு விஷயத்திலே உன் கவனம் சிதறி இருக்கு,. இதை அப்படியே விடு இன்னும் கொஞ்சநாள் போகட்டும் , உன் போக்குக்கு இரு மேற்கொண்டு இதே பிடிப்பு தொடர்ந்தால் யோசிப்போம்."

"அப்போ இதை இன்பேக்ட்சுவேஷன்னு சொல்றீயா ?"

"நீ தடுமாறிட மாட்டே மீனா. பார்த்ததும் எல்லா பொருள்மீதும் ஆசைப்படும் ரகம் நீ இல்லை. இருந்தாலும் இந்த நாள் கடப்பு உன் விருப்பத்திற்கு உறுதியைக் கொடுக்கும் அதுதான் உனக்கு நல்லது."

(தொடரும்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+