"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - (6)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 6வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"ஸார் பிரஸ்பீப்பிள்ஸ் எல்லாம் சத்தம் போடறாங்க ? ஒரு கான்ஸ்டபிள் வந்து சொல்ல...."
"இதோ வருகிறேன் என்று வெளியேறினார்கள் அனைவரும்.... பொதுமக்கள் சிலர் ஈஸ்வருக்கு ஆதரவாய் பேசினார்கள். அய்யா அவர் செய்தது தப்பே இல்லை,, சமூகத்தில் நடந்த சீர்கேட்டை புல்லுருவிகளை அவர் அகற்றி இருக்கிறார். பெற்றவர்கள் வயிற்றில் பால்வார்த்து இருக்கிறார். அவரை தண்டிப்பதனால் நாங்கள் போராட்டம் நடத்திட வேண்டியிருக்கும்."
"அமைதி.... ஈஸ்வர் மேல் எந்த விசாரணையும் வராது அதை நான் பார்த்துக் கொள்ளகிறேன். தயவு செய்து பிரச்சனை செய்யாமல் கலைந்துபோங்கள் என்று கமிஷனர் கேட்டுக்கொண்டு நான் மேலிடத்தில் பேசுகிறேன்" என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். வெளியேறிய அவனை பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் சூழ்ந்துகொள்ள,

"ரொம்பவும் துணிச்சலான காரியம் செய்து இருக்கீங்க? ஏதாவது பிரச்சனை வருமின்னு எதிர்பார்க்கிறீங்களா ? ஏன்னா இறந்துபோன வேலுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கே....?"
"வந்தாலும் கவலை இல்லை.... நான் என் கடமையை செய்தேன். காஞ்சிபுரம் குழந்தைகள் இரட்டைக்கொலை நம் நெஞ்சை விட்டு இன்னமும் அகன்று இருக்காது. யோசியுங்கள் எவனோ ஒருவன் தன் சுயலாபத்திற்காக ஒண்ணும் அறியாத அப்பாவிக் குழந்தைகளை பலியாக்குவது நல்லதா? அப்படிப்பட்டவர்களை விசாரணையின்றி கொல்ல வேண்டும். பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரின் மனம் என்ன பாடு பட்டு இருக்கும். அந்த வேதனையில் சம்பந்தப்பட்டவன் மட்டும் கிடைத்திருந்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். மனசாட்சி உள்ள யாராலும் இதை தவறென்று சொல்ல முடியாது ?"
"பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ?"
"உங்களுக்கு என்ன வேலையிருந்தாலும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட காரியங்களை நீங்களே நிறைவேற்றுங்கள். அவர்களை உங்கள் கண்பார்வையிலேயே வைத்திருங்கள். வேலையாட்களை நம்பிக்கொண்டு, உங்கள் செல்வங்களை இழந்துவிடாதீர்கள்? அவ்வளவுதான்.!'"
மறுநாள் காலையில் பத்திரிகைகளும், மீடியாக்களும் ஈஸ்வரின் செயலை பாராட்டிக்கொண்டு இருந்தது. அத்தனை புகழ்ச்சிக்கும் காரணமான ஈஸ்வரன் அலட்டாமல் அமைதியாய் தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தான்,
"வாழ்த்துக்கள் ஈஸ்வர்....!"
"வாடா சுரேன்.. என்னடா திடீர் விஜயம் ? மழைவரப்போகுதா ?" வேடிக்கையாய் வானத்தைப் பார்த்த நண்பனை முதுகில் தட்டினான் சுரேன்.
"காபி சாப்பிடறீயா ?"
"நோ நோ எத்தனை பெரிய காரியம் பண்ணியிருக்கே ? பெரிய டீரீட் தரணும்.? வெறும் காபியோட துரத்திட பாக்குறியா ?"
"நான் என்னடா பெருசா செய்திட்டேன். என் கடமைதானே இது. அதை மீடியாக்கள்தான் பெருசா காட்டுதுன்னா, நீயும் வந்து வாழ்த்தறியே? நான் என்னவோ
பெருசா சாதிச்சா மாதிரி.....!"
"அடப்பாவி! தன்னடக்க தர்மரே ! ஓவர் நைட்லே ஹீரோ ஆயிட்டே டீவி, பேப்பர்ன்னு எதைப்பார்த்தாலும் உன் முகம்தான்."
"போடா ! உன் ஸாப்ட்வேர் கம்பெனியெல்லாம் எப்படிபோகுது?"
"மெஷின் லைப்டா மச்சான், தினமும் கண்விழிக்கும்போதே ஆயிரம் பிரச்சனைகள்.'
"கம்ப்யூட்டரோடதானே போராடுறே? என்னை மாதிரி களவாணியோட இல்லையே ?'
சுரேன் ஈஸ்வரைப் புன்னகையோடு பார்த்தான். நல்ல நிறம், அழகான வசீகரிக்கும் பெரிய கண்கள், நெடுநெடுவென்ற உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், இளஞ்சிவப்பான மெத்தென்ற உதடகள், அதை உட்பக்கமாய் கடித்து கன்னக்குழி விழ அவன் சிரிப்பது ஆளை அடித்துப்போடும் அழகு..!
"உன்னை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்குடா.....! நண்பனின் அருகில் நெருங்கி அமர்ந்து தோளில் கைபோட அவன் நெளிந்தான். அடப்பாவி இத்தனை பெரிய ஆளாயிட்டே! ஊரே உன்னைப்பார்த்த மிரளுது இன்னமும் உனக்கிந்த கூச்சம் போகலையா ? பாவம்டா உன்னைக் கட்டிக்கப்போறவ ?" என மழுமழுவென்று ஷேவ் செய்யப்பட்டு இருந்த மோவாயில் இடித்தான் சுரேன்.
"அதை அப்புறமாய் பார்க்கலாம் என்று உதட்டை மடித்தபடி சிரித்தான்." ஈஸ்வர்
"இந்த,,,,, இந்த சிரிப்புதாண்டா மச்சான் உன் ஹைலைட்! நீ மட்டும் பொண்ணாயிருந்தா நானே உன்னைத் தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிப்பேன் சும்மா கற்பனை பண்ணி பாரேன் ?"
"ஏதை ? என்னன்னு ?"
'நானும் நீயும் காதல் பண்றாமாதிரி....!'
ஈஸ்வர் மனம் விட்டு சிரித்தான். நண்பனின் கற்பனையையெண்ணி!
"மறுபடியும் அப்படி சிரிக்காதேடா ? உன் உத்தியோகத்திற்கு உள்ள முரட்டுத்தனம் உன் முகத்திற்கு இல்லை அதில் மென்மை அதிகம். அதிலும் உன் கண்கள் இருக்கே... ?"
'நிறுத்துடா... மச்சீ..... இன்னைக்க உனக்கு என்னாச்சு ? ஏன் இப்படி ஆயிட்டே ? உன் பக்கத்திலே உக்காரவே எனக்கு பயமாயிருக்கு.."
"ஏற்கனவே உன் மேலே எனக்கு இம்ப்ரஸ் அதிகம். இப்போ நீ பண்ணிய காரியம் வேற அதிகமா இம்ப்ரஸ் பண்ணவைக்குது."
"நீ சரியில்லை முதல்ல வீட்டுக்குப் போ ....."
"விரட்டாதேடா கிளம்பறேன்.." அவன் ஈஸ்வரின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றான்.
(தொடரும்)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications