இது தாங்க காதலுக்கும், கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்...
‘காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை...' என சொல்லப்படுவதுண்டு.
கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை.
இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில.....

காதல் சண்டை....
காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா...திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு....
காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி... திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா....
காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது... திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்...

குழந்தைகள்....
காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்.... திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி....
காதல் பசியைக் குறைக்கும்... திருமணம் உடல் எடையைக் குறைக்கும்... (கவலைகளால்...)

டிவி யுத்தம்....
காதலுக்கு டிவி தேவையில்லை... திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்....

இளநீர் தத்துவம்....
காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா... திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத...'

அவ்ளோ தாங்க....
மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை....கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி....
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications