Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் & மீலாது நபி (ஸல்) விழா!

அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் & மீலாது நபி (ஸல்) விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டார்.

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் & மீலாது நபி (ஸல்) விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் மற்றும் மீலாது நபி (ஸல்) விழா 01 - 12 - 2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அபுதாபி எலக்ட்ரா சாலையில் உள்ள எமிரேட்ஸ் என்.பி.டி. பில்டிங் ஆவை அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.

Maulid Shareef Majlis & Milady Nabi function on behalf of the quaid e millath in Abidhabi

நிகழ்ச்சிக்கு பேரவையின் அபுதாபி மண்டல ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் மௌலவி ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் தலைமை வகிக்க, பேரவையின் பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.

பேரவையின் அபுதாபி மண்டல கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜுத்தீன் மன்பஈ இறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, துணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஏ. பரகத் அலி வரவேற்புரையாற்றினார்.பேரவையின் பொருளாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி பேரவையின் சேவைகள் பற்றி அறிமுகவுரையாற்ற, மார்க்கத்துறை இணைச் செயலாளர் மௌலானா கலீல் ரஹ்மான் பிலாலி ஹள்ரத் முன்னுரை வழங்கினார்.

Maulid Shareef Majlis & Milady Nabi function on behalf of the quaid e millath in Abidhabi

திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பேராசிரியர் எம்.எம். ஷாஹுல் ஹமீத், பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஜே. ஷம்சுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வடகரை தீ.ப. மஸ்ஜித் இமாம் மௌலவி ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் வாஹிதி ஹள்ரத், முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூஃப் பிலாலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹள்ரத் நிறைவுரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் அய்மான் சங்கம், மௌலிது கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகள், உலமாக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

Maulid Shareef Majlis & Milady Nabi function on behalf of the quaid e millath in Abidhabi

பேரவையின் அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டலச் செயலாளர் ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி நன்றியுரையாற்றினார். துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+