Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளியோபாட்ராவுக்கு பிடிச்ச பழம் எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும். காதல் நாயகி என்று அழைக்கப்படும் கிளியோபாட்ரா தனது செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க அதிக அளவில் அத்திப்பழத்தை உண்பாராம்.

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தால் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

காதல் ஹார்மோன்கள் தாம்பத்தியத்தினை உயிர்போடு வைத்திருக்க உதவுபவை. இவை குறைந்து போவதின் மூலம் இல்லறத்தில் சிக்கல் ஏற்படுவதோடு உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Men with low testosterone at higher heart disease risk

வீட்டில் நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளிலேயே இந்த காதல் ஹார்மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறதாம். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம் மிக மலிவான எளிமையாக கிடைக்கும் பழம். இதில் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. தினசரி ஒரு பழம் சாப்பிடலாம்.

அவகடோ

ஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ நம் நாட்டில் வெண்ணைய் பழம் என்று அழைக்கப்படுகிறது. இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.

அத்திப்பழம்

பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாம்.

கடல் சிப்பு

ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். கடல் சிப்பிகளில் அதிக அளவிற்கு துத்தநாகச் சத்து உள்ளது. சிப்பியின் ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.

தண்ணீர் விட்டான் கிழங்கு

அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.

துளசியின் நன்மை

இந்தியாவின் மூலிகை மற்றும் தெய்வீகச் செடியான துளசி இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு' என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது.

காமப் பெருக்கி

மிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

வெள்ளைப் பூண்டு

ரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது.

காதல் சாக்லேட்

சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் மற்றும் செரடோனின் ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.

ஒயின்

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.

பக்கவிளைவுகள் இல்லை

இந்த உணவுப் பொருட்களை சரியான அளவில் உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இவை இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் என்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+