ஞாபகம் வருதே..: 18 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் சந்தித்த முஹம்மது சதக் கல்லூரி முன்னாள் மாணவர்கள்
துபாய்: அமீரகத்தில் வசித்து வரும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் (1993-1997 BATCH) 18 வருடங்களுக்குப் பிறகு, அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி துபாய் முஸ்ரிப் பூங்காவில் ஒன்று கூடினார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஆரம்பகட்டமாக அறிமுக படலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புச்செழியன் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். பின்பு உரையாற்றிய முன்னாள் மாணவர் கீழைராஸா கல்லூரி அனுவங்களை கவிதையாக வாசித்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ரத்ததானம், தமிழக வெள்ள நிவாரண நிதியுதவி உட்பட பல சமூக சேவை சம்பந்தமான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முகம்மது சதக் பொறியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இப்ராகிம், மறைந்த மாணவர்கள் விமல்குமார், தாமஸ் டேவிட் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிறைவாக ஒருங்கிணைப்பாளர் தாஜுதீன் நன்றி உரை நிகழ்த்த, அனைவரும் பிரியா மனதுடன் பிரிந்து சென்றார்கள். நிகழ்ச்சியில் பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications