துபாயில் கோலாகலமாக நடைபெற்ற முதுவை சங்கமம்
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பிலான "முதுவை சங்கமம் 2013" கடந்த வெள்ளிக்கிழமையன்று முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துணைத் தலைவர் அஹமது இம்தாதுல்லா இறை வசனங்களை ஓதினார். இந் நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார்.
அவர் தனது தலைமையுரையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு நமது ஊரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் தமது வரவேற்புரையில், ஜமாஅத் தாயகத்தில் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.
முதுகுளத்தூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் ஃபரீஹுல்லா, சென்னை முதுகுளத்தூர் இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் ஜாஹிர் ஹுசைன், மதுரை பிலால் ஹோட்டல் அதிபர் லயன் காஜா முஹைதீன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர் ஃபரிஹுல்லா குறித்த அறிமுகவுரையினை புதிய நிலா மு. ஜஹாங்கீர் நிகழ்த்தினார். சிங்கப்பூர் ஃபரீஹுல்லா தமது ஏற்புரையில், அமீரகத்தில் தாயக உறவுகளை சந்திப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் உறவுகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பெருமகிழ்வு அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை ஜாஹிர் ஹுசைன் பேசுகையில், சென்னையில் நடைபெறும் தங்களது சங்க நிகழ்விலும் அமீரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அபுதாபி அமீனுதீன், அஹமது சாதிக் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தரின் சேவையினைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது,
ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் நிர்வாகக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். பொருளாளர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
இந் நிகழ்வில் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க நிர்வாகக்குழுவினர், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜமாஅத் அங்கத்தினர்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஜாஹிர் ஹுசைன், ஹபிப் திவான், அஹமது சாதிக், ஜாபர் கனி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications