மஸ்கட் வாழ் தமிழர்கள் பங்கேற்ற 'சகலகலா குடும்பம்'
மஸ்கட்: மஸ்கட் வாழ் தமிழ்க் குடும்பங்களின் உறவுப் பிணைப்பாக இருக்கும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 'சகலகலாக் குடும்பம்' என்னும் ஒரு பல்திறன் போட்டியை நடத்தியது. இந்நிகழ்ச்சி இந்தியன் ஸ்கூல் மஸ்கட் வளாகத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
போட்டி விதிகளாக குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் கண்டிப்பாக ஒரு குழந்தை பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து மூன்று நபர்களும் மற்றும் அதிக பட்சமாக நான்கு நபர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்தது.

நகைச்சுவை, நடனம், நாடகம், பல்குரல் வித்தை, இசை, பாடல், தந்திர விளையாட்டு மற்றும் பார்த்ததில் ரசித்தது எனும் திரைப்பட காட்சி படைப்பு என இவற்றுள் ஏதாவது மூன்றை எடுத்து மேடையில் திறன்வெளிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கமாகும். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் திருமதி. விஜயலட்சுமி மற்றும் திரு. மணிகண்டன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்த, சங்க வழிகாட்டி முன்னாள் தலைவர் திரு.ஜானகி ராமன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடுவராக பிரபல நாடக நடிகர் பீலிசிவம் அவர்களும், நாட்டிய ஆசிரியை பத்மினியும் கலந்து கொண்டார்கள்.

சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மஸ்கட் வாழ் தமிழ்குடும்பங்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்றனர். முடிவில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் புதிய உறுப்பினர்களை முன்னாள் தலைவர் திரு. ஜானகிராமன் அறிமுகம் செய்து வைக்க, சங்கத்தின் இலக்கிய அணிச் செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சியாக, பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய 'பூவையர் பூங்கா' எனும் நிகழ்ச்சி நாளை(ஜூன் 5ம் தேதி) நடக்கிறது. அந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி மற்றும் மார்பக புற்று நோய் நிபுணர் மருத்துவர் சுமனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications