ஷார்ஜாவில் வண்ணமயமாக நடந்த நிரித்யசமர்ப்பண், இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக அரங்கில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் நிரித்யசமர்ப்பண் என்ற இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி 12.06.2015 அன்று மாலை நடைபெற்றது. ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள போக்குவரத்து துறையில் கமிஷனராக உயர் பதவி வகித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜன் நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு டிடிஎஸ் இவெண்ட்ஸின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளரும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான பிரசன்னா நாயுடு வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் பேசிய டாக்டர் ராஜன் நடராஜன் கூறுகையில், வெளிநாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாம் நமது தமிழகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்து அனைத்து துறைகளிலும் பரிணமிக்க வேண்டும் என்றார். தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டாலே போதும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நம்மைப் போன்ற வெளிநாடு வாழ் தமிழர்கள் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறு குழந்தை முதல் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. இதற்காக பெரும் முயற்சிகள் செய்து வரும் நடன ஆசிரியை கவிதா பிரசன்னா மற்றும் அவரது குழுவினரை பாராட்டினார்.

நடன ஆசிரியை கவிதா பிரசான்னாவிடம் பயின்ற 200க்கும் மேற்பட்டோர் தங்களது நடனத் திறமையை அரங்கேற்றம் செய்தனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, பிரசன்னா,
கீதா கிருஷ்ணன், சுந்தர், விஜயேந்திரன், விஜயராகவன், பாலா உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், பிரைம் மெடிக்கல் சென்டர், பிளாக் துளிப் பிளவர்ஸ், அப்கிரேட் டயர் நிறுவனம், துபாய் பிரிண்டிங் பிரஸ், பெருமாள் பூ க்கடை, நுஜும் சென்னை உணவகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற உதவி வழங்கியிருந்தன. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications