எங்கிருந்தாலும் இணையலாம்.. ஆதவன்தீட்சண்யா பேச்சை கேட்க.. அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் வட்டம் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சாதி மறுப்பும் சாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள பெரியார் அம்பேத்கர் வாசகம் வட்டம் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழகத்தில் இருந்தே பல்வழி அழைப்பின் மூலம் இணைந்து உரையாற்ற உள்ளார். சாதி மறுப்பும் சாதி ஒழிப்பும் என்ற தலைப்பின அவரது உரையை உலகில் எந்த மூலையில் இருந்து நாமும் கேட்கலாம்.

Periyar Ambedkar Study Circle America holds ‘Anywhere’ Online meeting

இந்திய நேரப்படி சரியாக நாளை காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. கணினி மற்றும் ஸ்மார்ட் போனும் இருந்தால் போதும். ஆதவன் தீட்சண்யாவின் உரையை கேட்கலாம். மேலும், அமெரிக்க தமிழ் வானொலியிலும் நேரடியாக கேட்கலாம். அதற்கு www.americantamilradio.com என்ற இந்த இணைய தளத்தில் இணைய வேண்டும்.

உலகில் உள்ள அனைவரும் ஓர் இடத்திற்கு சென்று நிகழ்ச்சியை காண்பதற்கு பதிலாக எந்த இடத்தில் இருந்தும் பேச்சாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை அமெரிக்க பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
‘Anywhere’ teleconference will be held by Periyar Ambedkar Study Circle America. Tamil writer Aadhavan Theetchanya will speak about caste.
Please Wait while comments are loading...