ஆஸ்திரேலியாவைக் கலக்கிய பெர்த் தமிழ் விழா

Subscribe to Oneindia Tamil

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த தமிழ் விழாவில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பெர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த முறை.

perth Tamil vizha held

இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது. பெரும் திரளான பெர்த் வாழ் தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதற்கேற்ப பல்வேறு போட்டிகள் இதில் இடம் பெற்றன.

perth Tamil vizha held

தமிழர்ளின் பாரம்பரியமான ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில் கலந்து கொண்டு பலரும் தங்களது திறமையை வெளிக்காட்டி மகிழ்வித்தனர்.

perth Tamil vizha held

இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுமார் 300-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விழாவானது சம்பந்தப்பட்ட அனைவரையும் திருப்திப்படுத்தி நிறைவுற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+