ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் நான்கு மணி நேர பொங்கல் விழா!
ஆஸ்டின் (அமெரிக்கா): ஆஸ்டின் நகரில் 26 ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு முனவர் க.சுபாஷினி மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார்.
ஏராளமான குழுவினர்கள் வெவ்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி நடனம், பறையிசை , நாட்டுப்புற நடனம், திரையிசை நடனங்கள் என வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

வைஷ்ணவி அனைவரையும் வரவேற்றார். மாதினி மற்றும் அஷோக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள், விஜயகுமார் நன்றியுரை ஆற்றினார்.
நிறைவான மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா, பின்பா?
நிறைவான மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா இல்லை பின்பா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக எப்படி ஜாலியாகச் சுற்றித் திரிந்தோம் என்று ஒரு பக்கம் பேசி மகிழ்ந்தார்கள்.
அந்த அணியில் கஜேந்திர பிரசாத், கார்த்திகை சிவசாமி, இன்பா ஆகியோர் திருமணத்திற்கு முன்பு துள்ளித் திரிந்த காலத்தை கலகலப்புடன் நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்கள்.
அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜின்' எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா' வசனத்தை நினைத்துப் பார்த்து தீர்ப்பு வழங்குமாறு ஒருத்தர் நடுவருக்கு நினைவு படுத்தினார்.

மறுபக்கம், அண்ணன் தம்பி என்று எத்தனை உறவு இருந்தாலும் பொண்டாட்டி, குழந்தைகளுக்கு
ஈடாகுமா. தாத்தா பாட்டி என்ற பெருமையை பெற்றுக் கொடுக்க திருமணமும் மனைவியும் குழந்தைகளும் அவசியம் அல்லவா! என்றெல்லாம் திருமணத்தின் அவசியத்தை அடுக்கினார்கள்.
வெட்டித்தனமாக சுற்றிக்கொண்டிருப்பது பொறுப்பற்றதனமே அன்றி மகிழ்ச்சி இல்லை என்றெல்லாம் கவுன்ட்டர் கொடுத்தனர். பிருந்தா, சுகந்தி, கார்த்திக் ஆகியோர் திருமணத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

தனக்கும் திருமணமாகி, மனைவி அனுமதியுடன்தான் வந்திருப்பதாக கலகலப்பூட்டிய நடுவர் அருள் நம்பி, திருமணமத்திற்கு பின்பே நிறைவான மகிழ்ச்சி என்று தீர்ப்பளித்தார்.
வாழ்க்கை என்பதே ஒரு தேடல். அந்த தேடல் தரும் வெற்றி அந்த வெற்றி தரும் மகிழ்ச்சிதான் நிறைவாக இருக்கும். ஆகவே நிறைவான மகிழ்ச்சி என்பது திருமணத்திற்கு பின்புதான் என்பது அவரது தீர்ப்பு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications