அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் இளம்பிறை மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்
அபுதாபி: 20/11/2013 அன்று மாலை 7 மணி அளவில் அபுதாபி -இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் எதிர்வரும் டிசம்பர் 28ம் தேதி அன்று திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற இருக்கும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சி பேரணி விளக்க கருத்தரங்கம் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ கிராஅத் (இறைமறை வசனங்கள்) ஓதினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை ஏ .எஸ்.முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக காயிதே மில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி துவக்க உரையாற்றினார்.
அபுதாபி கே.எம்.சி.சி தற்காலிக தலைவர் ஹசன் குட்டி மாஸ்டர், அபுதாபி கே.எம்.சி.சி .பொதுச் செயலாளர் டி.கே. ஹமீது, ஷார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை பாட்சா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் மாநாட்டின் நோக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ் மாநாட்டின் நோக்கம் குறித்தும், மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தும் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், மணிச்சுடர் நாளிதழின் செய்தி ஆசிரியருமான காயல் மஹபூப் எழுதிய இட ஒதுக்கீடு நூல் முதல் பிரதியை குத்தாலம் ஏ.லியாகத் அலி வெளியிட அபுதாபி கே.எம்.சி.சி யின் தற்காலிக தலைவர் ஹசன் குட்டி மாஸ்டர் பெற்றுக் கொண்டார்.
இரண்டாவது பிரதியை மாநில யூத் லீக் செயலாளர் எம்.கே.முஹம்மது யூனுஸ் வெளியிட அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, ஐ.எம்.எப். தலைவர் முஹையத்தீன் அப்துல் காதர், அமீரக காயிதே மில்லத் பேரவை பிரதிநிதி திட்டச்சேரி ஜாபர் சாதிக் பைஜி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் காயல் ஹுஸைன் மக்கி ஆலிம், காயிதே மில்லத் பேரவையின் துபாய் தேரா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை ராஜாஜி காசிம், திருவாடுதுறை இஸ்லாமி பைத்துல் மால் தலைவர் அப்துல் ரஜ்ஜாக், அதிரை காதர் முஹைதீன், கவியன்பன் கலாம், பத்திரிக்கையாளர் வி.களத்தூர் கமால் பாஷா, சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்திருந்த அய்யம்பேட்டை அப்துல் காதர் சாப்ஜி, வடகரை நூருல்லாஹ் பைஜி, மதுக்கூர் சாதிக், நாகூர் முஹம்மது முஜ்ஜம்மில், திருவாடுதுறை ஜுபைர் ஷம்சுத்தீன், நீடூர் மெளலவி நூர் முஹம்மது, சென்னை காதர் மீரான், லால்பேட்டை எஸ்.ஏ.ரபி அஹமது, ஏ.முஹம்மது அப்பாஸ் ,பி.ஒய்.ஜாபர் அலி, வி.ஏ.அஹமது, ஆடுதுறை அப்துல் காதர், பிரோஸ், அர்ஷத் அஹமது, கடையநல்லூர் நாசர் பைஜி, திருச்சி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக அபுதாபி மண்டல செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது நன்றி கூற, காயல்பட்டினம் ஹபிபுர் ரஹ்மான் மஹ்ழரி "துஆ" உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications