சவூதி அரேபியா தம்மாம் நகரில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!
சவூதி அரேபியா வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தம்மாம் நகரில் நடந்தது.
தம்மாம் : சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிய வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சர்வீஸ் பொது மேலாளர் திருஞான சம்பந்தம், முஸ்லிம்களின் நோன்பு என்பது ஈகையை உணர்த்தும் ஒரு அரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் துணை பொது மேலாளர் உமா சங்கர் தனது கருத்துரையில் தாம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கொண்ட போது பலரது வேடிக்கைக்கு முன்னால் ஒரு இஸ்லாமிய நண்பர் ஓடி வந்து என்னை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து எனது பெற்றோர் வரும் வரை அருகில் இருந்து கவனித்தார். அந்த இஸ்லாமிய நண்பரின் உரிய நேரத்திலான உதவியால், நான் இன்று உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டவர், இரக்கமும் ஈகையும் தான் முஸ்லிம்களின் உன்னதமான சொத்து என்று பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.
அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் மேலாளர் வாயல் தனது உரையில், நோன்பு என்பது ஒரு மனிதனின் குணங்களை மேன்மைபடுத்துவதற்கும்,அழகிய பண்புகளை வார்த்தெடுப்பதற்கும் உரிய பயிற்சியாகும் என குறிப்பிட்டார்.

இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய சகோதரர்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி சகோதரத்துவத்தை வெளிக்கொணர்ந்த வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனியின் நிர்வாகத்திற்குத் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக நோன்பின் மாண்பு என்னும் தலைப்பில் கீழை ஜஹாங்கீர் அரூஸி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத் பிரமுகர்கள் கரீம்பாசிர்,தொண்டியப்பா என்னும் அபுபக்கர்,தாஜுல் ஆரிபீன்,அப்துல் ரவூப்,ஸ்பேர் பார்ட்ஸ் மேலாளர் சம்பத்,சர்வீஸ் மேலாளர் வெங்கடேஷ் மற்றும் வெஸ்டர்ன் ஆட்டோ சூப்பர் வைசர்கள்,தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications