ஈமான் அமைப்பு சார்பில் துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்!
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஈமான் அலுவலகம் அமைந்துள்ள அஸ்கான் ஹவுசில் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை 7.30 மணி முதல் நடத்தப்படுகிறது.
இந்த முகாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மேடைப்பேச்சின் முக்கியத்துவம் கருதி இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் ஈமான் அமைப்பு மருத்துவ முகாம், ரத்ததான முகாம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். விழாக்குழு செயலாளர் கோட்டாறு சாதி இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக வெஸ்டர்ன் ஆட்டோர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கமால், தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லா, இஸ்லாமிய இலக்கிய கழக புரவலர் வழுதூர் எம்.ஜே. அப்துல் ரவூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அல்ஹாஜ் பி.எஸ். எம். ஹபிபுல்லா பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். குணா, ஜெயா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர் ரபீக், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை உள்ளிட்டோர் பேச்சுப் பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். அவர்களில் சிறப்பாக பேசிய முகைதீன் அப்துல் காதர், பாத்திமா ஆகியோருக்கு பரிசுகளை அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப், டேலண்ட் பயிற்சி மையத்தின் சன்யோ ஆகியோர் வழங்கினர்.

விழாக்குழு துணை செயலாளர் கீழக்கரை நஜீம் மரைக்காயர் நன்றியுறை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவிபட்டிணம் நிஜாம், சபீர் அலி, கூத்தாநல்லூர் பைரோஸ் கான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications