அமெரிக்காவின் 6 நகரங்களில் ‘சிரிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி
கலக்கப்போவது யாரு.. அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் மேலூர் சசி ஆகியோர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டிய கலை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ‘சிரிக்கலாம் வாங்க' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள்.
கடந்த முறை மிச்சிகன் டெட்ராய்ட்டிலும், மிசெளரி செயிண்ட் லூயிசிலும், மின்னசோட்டாவிலும், விஸ்கான்சின் மேடிசனிலும், டெக்ஸாஸ் டாலசிலும், கலிபோர்னியாவில் சாக்கரமெண்ட்டோவிலும் நிகழ்ச்சிகள் செய்து அமோக வரவேற்பைப் பெற்ற அசத்தல் மன்னர்களின் ‘சிரிக்கலாம் வாங்க' நிகழ்ச்சி, இம்முறை ரிச்மாண்ட், வாஷிங்டன் தலைநகரம், கலிபோர்னியா வளைகுடாப் பகுதி, மத்திய ஃபுளோரிடா, தெற்கு ஃபுளோரிடா, மற்றும் ஹாரிஸ்பெர்க் ஆகிய நகரங்களில் அந்தந்த உள்ளூர் தமிழ்ச் சங்கங்களின் ஆதரவில் நடைபெற இருக்கிறது.

சென்ற முறை இந்த நகைச்சுவைக் குழு அமெரிக்காவின் பல இடங்களில் நடத்திய தனி நபர் நகைச்சுவை (Stand-up Comedy), பலகுரல் நிகழ்ச்சி (Mimicry) , பல்சுவை நகைச்சுவை (Variety Comedy), வேடிக்கை விளையாட்டு (Fun Games), அதிர்ஷ்டம் அழைக்கிறது (Lucky Trivia Games) என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ‘சிரிக்கலாம் வாங்க' நிகழ்வு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
‘சிரிக்கலாம் வாங்க!' நகைச்சுவை நிகழ்ச்சியில் பார்வையாளர்களான குழந்தைகள், இளையோர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் பங்கு பெறும்படியும், பரிசுகள் பெறும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபாசமில்லாத வகையில் குடும்பத்துடன் அனைவருடன் சேர்ந்து ரசித்துச் சிரிக்கும்படியான நிகழ்ச்சி என்பதே நிகழ்வின் தனிச்சிறப்பு.

நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடங்கள்:-
ஏப்ரல் 9, சனிக்கிழமை - Richmond, VA
ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம் - http://www.richmondtamilsangam.org/
ஏப்ரல் 10, ஞாயிற்றுக்கிழமை - Washington DC
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் - http://www.washingtontamilsangam.org/
ஏப்ரல் 16, சனிக்கிழமை - Fremond, CA
வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் - http://www.bayareatamilmanram.org/
ஏப்ரல் 23, சனிக்கிழமை - Orlando, FL
மத்திய புளோரிடா முத்தமிழ்ச்சங்கம் - http://www.mscf.shuttlepod.org/
ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை - Miami, FL
தென்பூவகத் தமிழ்ச்சங்கம் - http://sfts.org/
ஏப்ரல் 30, சனிக்கிழமை - Mechanicsurg, PA
ஹாரிஸ்பெர்க் தமிழ்ச்சங்கம் - http://www.harrisburgtamilsangam.com/
இந்த நகைச்சுவைக் குழுவின் அமெரிக்க பயண விவரங்கள் பற்றி அறிய: https://www.facebook.com/tsenorthamerica/
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications