'அது'... பெண்களுக்கு கொஞ்சம் போதுமாம்.. ஆண்களுக்குத்தான் நிறைய வேணுமாம்!
லாஸ் ஏஞ்சலெஸ்: அடுத்தவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் விஷயத்தில், ஆண்கள்தான் அகோரப் பசி கொண்டவர்களாக உள்ளனராம். அதேசமயம், பெண்களுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லையாம்.
கேஷுவல் செக்ஸ் விஷயத்தில் எப்போதுமே பெண்கள் அதிக விருப்பம் இல்லாதவர்களாக உள்ளனராம். ஆனால் ஆண்களுக்கு அது நிறைய தேவைப்படுகிறதாம்.
ஆண்களைப் பொறுத்தவரை நிறையப் பெண்களுடன் உறவு கொள்ள அவர்கள் எப்போதுமே ஆர்வம் காட்டுவார்களாம். பெண்கள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லையாம். இதையும் ஒரு ஆய்வுதான் சொல்கிறது.

பாலியல் வருத்தங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு வருத்தம், கவலை இருக்கும். அதில் ஆண்களும் சரி பெண்களும் சரி விதி விலக்காக இருக்க முடியாது. அதேசமயம், பாலியல் விவகாரங்களில் ஆண்களும் சரி, பெண்களும் சரி வித்தியாசப்படுகிறார்களாம்.

கன்னித்தன்மை போயிருமோ...
பெண்களைப் பொறுத்தவரை தங்களது கன்னித்தன்மையை இழப்பதை அவர்கள் வருத்தமான விஷயமாகவே கருதுகிறார்களாம். குறிப்பாக அறிமுகம் இல்லாதவர்களிடம் அதை இழக்கும்போது ரொம்பவே சோகமாகி விடுகிறார்களாம்.

வேகமாகப் போக விரும்பாத பெண்கள்
அதேபோல ஒரு நபருடன் படு வேகமாக நெருங்கி, அவரிடம் தங்களை இழக்கவும் பல பெண்கள் விரும்புவதில்லையாம். சில பெண்கள் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஆண்களுக்கு வேகம் பிடிக்குமாம்
அதேசமயம், ஆண்கள் இதில் நிதானம் காட்ட விரும்புவதில்லையாம். வேகத்தையே விரும்புகிறார்களாம்.

டெக்ஸாஸ் - கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள்
இதுதொடர்பாக டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் ஒரு கூட்டு ஆய்வை மேற்கொண்டு இந்த விவரங்களைக் கூறியுள்ளன.

25,000 பேரிடம்
இந்த ஆய்வுக்காக 25,000 பேரிடம் செக்ஸ் வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தனவாம்.

சுறுசுறுப்பா இருக்கனும்
முதல் முறையாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அக்கறை காட்டுகின்றனராம். மேலும், அதிக அளவிலான பெண்களை படுக்கை அறையில் சந்தித்து விட வேண்டும் என்று சுறுசுறுப்பாக இருக்கவும் விரும்புகிறார்களாம்.

தப்பான ஆள் கிட்டப் போய்
இதில் கலந்து கொண்ட பெண்களில் 56 சதவீதம் பேர் தவறான நபரிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதற்காக வருத்தப்படுகின்றனராம்.

25 சதவீதம் பேரின் கவலை
25 சதவீதம் பெண்களின் கவலை, கன்னித்தன்மையை பொருத்தமில்லாத நபரிடம் இழந்து விட்டோமே என்பதாக இருந்ததாம்.

மோசடி செய்து விட்டோமே...
23 சதவீத பெண்கள் தங்களை நம்பிய தங்களது காதலர்களுக்கு மோசம் செய்து விட்டதற்காக வருந்துகிறார்களாம்.

கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கலாம்
20 சதவீத பெண்கள் தங்களது பார்ட்னிடம் வேகமாக நெருங்கி விட்டதற்காக வருத்தப்பட்டார்களாம்.












Click it and Unblock the Notifications