For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பாவை - பாடல் 4

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Thirupavai and Tiruvempavai for the month of Margazhi

மழை பொழிவதற்கு காரணக்கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு, ஆகாயம் முழுதும் பரவி, திருமாலின் கருமேனி போன்று நிறம்பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையும், திருமாலின் வலக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சுரதர்சன சக்கரம் போல் பிரகாச ஒளி வீசிக்கொண்டு, அவனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லால் எய்தப்பட்ட அம்பு மழைபோல், உலகமக்கள் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், சரமாரியாக மழை பொழிய வேண்டுகிறோம்.

திருவெம்பாவை - பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள் விளக்கம்:

ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண்ணோ, அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள்.

எழுப்ப வந்த பெண்களோ, எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறகள் பேசுகின்ற மேலான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!

மாயையில் சிக்கிக் கொண்ட மனம், சோம்பலில் தொடர வேண்டி எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதனை அதன் போக்கில் விடாது, முயற்சி செய்து, இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.

English summary
Margazhi has arrived. Recital of Thirupavai and Tiruvempavai has begun in the temples all over Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X