ரஷ்ய யூனிவர்சிட்டியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக டாக்டருக்கு துபாயில் பாராட்டு
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஷ்ய பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அமீர்ஜஹானுக்கு பாராட்டு நிகழ்ச்சி 25.09.2013 அன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், ரஷ்யாவின் ஸ்டவரபோல் பல்கலைக்கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பெருமையளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சமுதாயப் பணிகளை விவரித்தார்.
கௌரவ ஆலோசகர் முதுவை சம்சுதீன் தனது துவக்கவுரையில், டாக்டர் அமீர்ஜஹான் அவர்கள் தமிழகத்தின் முதுகுளத்தூர் மண்ணில் பிறந்து ரஷ்ய பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பெரு மகிழ்வை அளிக்கிறது என்றார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டார் டாக்டர் அமீர்ஜஹான்.

டாக்டர் அமீர்ஜஹான் தனது ஏற்புரையில், தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மருத்துவப் பணியில் தன்னால் இயன்ற வரையில் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மக்களுக்கும் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் எத்தகைய மருத்துவம் சார்ந்த ஐயங்களுக்கும் தன்னை எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
துணைத் தலைவர் அஹமது இம்தாதுல்லா, துணைப் பொதுச் செயலாளர் ஹபிப் திவான், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக், இஸ்மாயில், ஷேக் அலி, ஜுபைர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஏ ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications