அமெரிக்காவில் முதல் முறையாக 'இரு மொழி முத்திரை' பெற்ற தமிழ் மாணவிகள்!
டல்லாஸ்: அமெரிக்காவில் முதல் முறையாக 'இரு மொழி முத்திரை'ப் பெற்றுள்ளனர் இரு தமிழ் மாணவிகள்.
அதாவது ஆங்கிலம் தவிர்த்து, தமிழிலும் புலமை பெற்றவர்கள் என்பதைக் குறிப்பதுதான் இந்த இரு மொழி முத்திரை.
இதனை வழங்குவது அமெரிக்காவின் மொழித்திறன் கோட்பாடுகளை வகுக்கும் ACTFL (American Council for Teaching Foreign Language) என்ற அமைப்பு.

இதுவரை தமிழுக்காக யாரும் இம்முத்திரைப் பெற்றதில்லை என்ற குறையைப் போக்கியுள்ளனர் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளி மாணவிகள் இருவர்.
அவர்களில் ஒருவர் ஜானிஸ் பெஞ்சமின். வைசாட்டாப் பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கிறார். பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் தமிழ்ப் பள்ளியில் 8 ஆண்டுகளாகத் தமிழும் கற்று வருகிறார்.
இன்னொரு மாணவி, ஈடன் ப்ரைரி மாவட்டப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி லக்ச்கன்யா. பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் தமிழ்ப் பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழும் படித்துவருகிறார்.

இருவரும் பென்சில்வேனியாப் பல்கலைகழகப் பேராசிரியர் வாசு ரெங்கநாதன் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுத் தேர்ச்சியடைந்து இம்முத்திரையைப் பெற்றுள்ளனர்.
2016 ஜூன் 11ல் நிகழ்ந்த மினசோட்டா தமிழ்ச் சங்க தமிழ்ப் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் மினசோட்டா கல்வித் துறையின் உலக மொழிக் கல்விக்கான சிறப்பு அதிகாரி உருசுலா லென்ட்ஸ் (Ursula Lentz) கலந்து கொண்டு இவ்விரு மாணவர்க்கான இருமொழி முத்திரை பற்றிய அறிவிப்பு விடுத்ததோடு, மினசோட்டா மாநிலக் கல்வித்துறையின் சிறப்புச் சான்றிதழும் முத்திரையும் இவர்களுக்கு வழங்கிக் கவுரவித்தார்.

இதன்மூலம் அம்மாநிலப் பல்கலைகழகக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூடுதல் தகுதியாகவும் உலக மொழிக்கான மதிப்பீடுப் புள்ளிகளை (World language credits ) மூன்று முதல் நான்கு பருவங்களுக்குப் பெறமுடிவதால் இவர்கள் கல்லூரிக் கட்டணத்தில் கணிசமான பணத்தைச் சேமிக்கவும் முடியும்.
புலம்பெயர்ந்த மக்களால் நிறைந்த அமெரிக்காவில் ஆங்கிலம் தவிர வேறோருமொழியை முறையாக முழுமையாகக் கற்பதற்கான சட்டத் திட்டங்களை வகுத்ததோடு அதனை ஊக்குவிக்கும் விதமாகப் பல சலுகைகளையும் 20 மாகாணங்களில் நடைமுறை படுத்தியுள்ளனர். இதில் மிகமுக்கியமானது இந்த இருமொழி முத்திரை வழங்கும் திட்டம்.

குறிப்பு: மினசோட்டா மாநிலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு 11 மாணவர்களோடு தொடங்கப்பட்ட "மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளி" தமிழ்க் கல்வியை வெறும் உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாகவும் ஆய்வு செய்து பாடத் திட்டங்களைக் கட்டமைத்ததோடு இங்கு தமிழ் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களையும் அறிவுறுத்தியதின் பயனாக இன்று 250 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருகிறது . மினசோட்டா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளி தமிழ் மொழிக் கல்விக்கான தரத்தினைத் தொடர்ந்து கூட்டி வருவதோடு, தமிழ்க் கல்விக்காக 2014ல் தரச் சான்றிதழும் (AdvancEd) பெற்றுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications