நேசிக்கும் நெஞ்சங்களின் அன்புக்கு நன்றி.. அமெரிக்காவில் அழகான கொண்டாட்டம்!
சார்லேட், அமெரிக்கா: அமெரிக்காவில் நவம்பர் மாத நாலாவது வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவிங் பண்டிகை (நன்றி தெரிவித்தல்) என்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்துமஸுக்கு முன்னாடி அங்கு கொண்டாடப்படும் பெரும் விழாவாக இது விளங்குகிறது.
நன்றி தெரிவிக்கும் விழாவன்று, அமெரிக்காவில் மக்கள் குடும்பம் குடும்பமாக சேர்ந்து தங்கள் வீட்டில் விசேஷ உணவுகளை சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.
காய்கறிகள், பூசணிக்காய் கேக், ஸ்வீட் பொடேடோ மேஷ் என்று பல ஐட்டங்கள் இருந்தாலும் பொறித்த வான்கோழி (Turkey) இந்த விருந்தில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த Turkey இல்லாத நன்றி தெரிவித்தல் கொண்டாட்டங்களே இல்லை எனலாம்.

நன்றி செலுத்தும் விழா
மக்கள் ஆலயங்களிலும் ஓன்று சேர்ந்து கூட்டாக பிராத்தனை நடத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பின்னர் அங்கும் கூட்டு விருந்து நடத்தி அனைவரும் ஓன்று கூடி மகிழுகின்றனர். மற்றவர் மேலான அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது .

குட்டீஸ்களின் உற்சாக நன்றி
பள்ளிகளிலும் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. நம் ஊரில் ஆசிரியர் தினம் அன்று குழந்தைகள் ஆசிரியர்களுக்கு பரிசு கொடுப்பது போல இங்கு இந்த தேங்க்ஸ் கிவிங் நாள் அன்று குழந்தைகள் பூங்கொத்து, வண்ண கார்டுகள் என்று குட்டி குட்டியாய் சுமந்து கொண்டு போய் தங்களது பாசத்துக்குரிய ஆசிரியர்களிடம் ஆசையாக நீட்டி தங்கள் நன்றியை அன்போடு சொல்லுகின்றனர் குட்டீஸ் கூட்டங்கள் .

அலுவலகங்களிலும் நன்றி மகிழ்ச்சி
அலுவலகங்களில் கூட இந்த விழாவை ஒட்டி பணியாளர்கள் ஒருவொருக்கொருவர் தேங்க்ஸ் கிவிங் கார்டு பரிமாறி தங்கள் சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து மகிழுகின்றனர். தேங்க்ஸ் கிவிங் டே அன்று முழு விடுமுறை வழங்கப்படுகின்றது. இதை ஒட்டி முந்திய தினம் இங்கெல்லாம் பார்ட்டி கொண்டாட்டங்கள் உண்டு.

நேசிக்கும் நெஞ்சங்களின் அன்புக்கு நன்றி
நியூயார்க் நகரில் நடைபெறும் Macy's Parade அணிவகுப்பு மிக பிரசித்தமானது. அதிகமான மக்கள் அங்கு கூடி தங்களுடைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டாடுகின்றனர். நேசிக்கும் நெஞ்சங்களின் அன்புக்கு நன்றி சொல்லி அன்பை இன்னும் ஆழப்படுத்தும் இந்த தேங்க்ஸ் கிவிங் ஒரு அழகான கொண்டாட்டமே.
- Inkpena சஹாயா
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications