அமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் சித்திரை இசை விழா!
அமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் சித்திரை இசை விழா நாளை நடைபெறுகிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் சித்திரை இசை விழா நாளை நடைபெறுகிறது.
அமெரிக்காவின் மினசோட்டாவில் பனிப்பொழிவு முடிந்து வசந்த காலம் சற்றே மெதுவாக எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கதிரவனும் தன் களைப்பைப் போக்கி பனிச்சாரலுக்கு விடைகொடுத்து தனது ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறான்.

இங்கு வாழும் அனைவரும் வெளியே தலைகாட்டி, நடமாடத் தொடங்கி நண்பர்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வசந்த கால வேளையில் நாம் நமது ஊர்களில் கேட்டு மகிழ்ந்த தமிழிசைப் பாடல்களையும், கிராமத்துப் பாடல்களையும் நேரடியாக, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கேட்டால் எப்படி இருக்கும், அப்படி ஒரு அருமையான வாய்ப்பு இப்போது மினசோட்டா தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
நாளை மாலை 4 மணிக்கு ப்ளூமிங்டன் பகுதியில் உள்ள கென்னடி பள்ளியில் சித்திரை இசை விழா நடைபெறுகிறது. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் இந்த இசை விழா மினசோட்டா தமிழ் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.
குழு நுழைவுச் சீட்டு விலை (Group Ticket Price)
பெரியவர்களுக்கு 9 $ சிறியவர்களுக்கு 1 $
குழு நுழைவுச் சீட்டு விலையில் வாங்க - சுந்தர் (6128602584), சச்சி (2016792933)
இணையத்தில் சீட்டு வாங்க http://www.mntamilsangam.org/2018musicconcert/
மேலும் விவரங்களுக்கு 6123996687












Click it and Unblock the Notifications