முளைப்பாரி, பறையிசை, உணவுத்திருவிழா, தெருவிழா... அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): சித்திரை மாதத்தை வரவேற்று தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருவிழா என்று அமெரிக்கா முழுவதும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்கா தமிழ்ச் சங்கங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சித்திரையைக் கொண்டாட உள்ளார்கள். முளைப்பாரி, பறையிசை நடனம், உணவுத் திருவிழா, கடைவீதியுடன் கூடிய தெருவிழா(Carnival) என்று திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

வாஷிங்டனில் முளைப்பாரி

வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏப்ரல் 10, ஞாயிற்றுக்கிழமை ஃபேர்ஃபேக்ஸ் நகரில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மல்லிக்கைப்பூ மணக்க பெண்கள் முளைப்பாரி எடுக்க உள்ளார்கள். வடை பாயசத்துடன் வாழை இலை விருந்துடன், அசத்தப்போவது யார் குழுவினரின் நகைச்சுவை விருந்தும் உண்டு.

US Tamils gearing up to celebrate Tamil New Year

தமிழிசை கருவிகள், சிறுதானியங்கள், சித்த மருத்துவம், தமிழகக் கட்டிடக்கலை உள்ளிட்ட அம்சங்களுடன் மரபுவழி கண்காட்சி நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக வர்ஜீனியா மா நிலத்தைச் சார்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கேரி கனோலி (Gerry Connolly) கலந்து கொள்கிறார்.

மிஷிகனில் நீங்கள் கேட்டவை

மிஷிகன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதன் முறையாக மாபெரும் இன்னிசை விருந்து நடக்க உள்ளது. ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மனோ , சித்ரா, விஜய பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப்பட்ட பாடல்களுடன் ‘நீங்கள் கேட்டவை' யாக மலர்கிறது.
கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துகுமார் சிறப்புரை ஆற்றுகிறார்.

டென்னசியில் பறையிசை

டென்னசி தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி ஸ்ரீகணேசா கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது, தமிழ் நிகழ்கலை கழகத்தின் பறையிசை, கரகாட்டம், திரையிசையில் தாள இசை, கும்மி ஆகியவை சிறப்பு அம்சமாகும். மேலும் கிராமிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

US Tamils gearing up to celebrate Tamil New Year

கலிஃபோர்னியாவில் உணவுத் திருவிழா

சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றத்தின் சித்திரை உணவுத் திருவிழா ஏப்ரல் 16 ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. வளைகுடா பகுதியிலுள்ள பெரும்பான்மையான உணவகங்கள் பங்கேற்று, 26 வகையான உணவுகளுடன் விருந்து உண்டு. சிரித்து மகிழ சின்னத்திரை அசத்தல் மன்னர்களின் சிரிப்பு விருந்தும் இருக்கிறது.

நியூயார்க்கில் இசை விருந்து

நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், ஏப்ரல் 9ம் தேதி சனிக்கிழமை பிரபல கர் நாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரணின் இசை கச்சேரி நடைபெறுகிறது. ஃப்ளஷிங் பிள்ளையார் கோவில் வளாகத்தில் மாலை மூன்று மணி அளவில் சித்திரை திருநாள் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பனை நிலத்தில் பெண் எழுச்சித் திருநாள்

சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச்சங்கம், சித்ரா பவுர்ணமியை கொண்டாடும் வகையில் 'பெண் எழுச்சித் திருநாளாக' கொண்டாடுகிறார்கள். ஃபாலி கடறகரையில் கூடி மகிழ்ச்சியுடன் விளையாடிக் களிக்கிறார்கள்.

பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை விருந்தாக படைக்கிறார்கள். கஞ்சித் திருவிழா என்றும் இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு மலர்கள் கொடுத்து, மரியாதை செலுத்தி , கற்புக்கரசி கண்ணகியை நினைவு கூர்ந்து பெண்களின் எழுச்சியைப் போற்றுகிறார்கள்

US Tamils gearing up to celebrate Tamil New Year

சான் அன்டோனியாவில் வில்லுப்பாட்டு

டெக்சாஸின் முக்க்ய நகரங்களின் ஒன்றான சான் அண்டோனியாவில், ஏப்ரல் 23ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். இசை நிகழ்ச்சிகள் நடனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகளுடன் வில்லுப்பாட்டும் இடம் பெறுகிறது.

டல்லாஸில் கடை வீதியுடன் தெருவிழா

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா, தெருவிழா (Carnival) ஆக ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது. 100 ஏக்கர் சௌத்ஃபோர்க் ராஞ்ச் வளாகத்தில் திறந்தவெளி அரங்கம், விதவிதமான கடைகளுடன் கடை வீதி, விளையாட்டுகள், உணவகங்கள் என ஊர்த் திருவிழா போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கொண்டாட்டம் நீடிக்கிறது.

தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சுகி சிவம், சுமதி மணிகண்டன் பங்கேற்கும் பட்டிமன்றம், கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சிறப்புரை, மனோ, சித்ரா, விஜயபிரகாஷ் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

பங்குனி சித்திரையில் தமிழக கிராமங்களில் நடைபெறும் குலதெய்வ வழிபாடு, கிராமத் திருவிழாக்களை போல், அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு விதமாக சித்திரைத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்

-இர தினகர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+