Aadhavans Essay
![]() |
நாகரீகத்தின் பெயரில் கிராமங்களும் மெல்ல மெல்ல தங்களது உயிர்மையை இழந்து வரும் சூழலில் நாட்டுப் புறப்பாடல்களை புத்தகங்களில் மட்டுமல்லாமல் இணையத்திலும் பாதுகாக்கும் முயற்சி இது.
கிராமத்து இலக்கியங்களான இந்த நாட்டுப் புறப் பாடல்கள், வாழ்க்கையின் விளக்கங்கள் ...
தாலாட்டு, காதல், தொழில், கொண்டாட்டம், ஒப்பாரி என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பறை சாற்றும் இந்த வாய்மொழிப் பாடல்கள் தமிழின் மூத்த இலக்கியங்களில் ஒன்று.
இப்போது தனது பலமிழந்து நம் ஊர் கிராமப் புறங்களில் மெளனமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் நாட்டுப்புறப் பாடல்கள்சிலவற்றை உங்கள் முன் வைக்கிறோம்.
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே
பச்சை மணக்குதடி பாதகத்தி ஒம் மேல
இச்சை பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுறனே ..
பாக்கு துவக்குதடி பழைய உறவு மங்குதடி ..
ஏலம் கசக்குதடி இன்னொருவன் மையலாலே ...
தங்கத்துக்குத் தங்கம் இருக்க தனித் தங்கம் நானிருக்க..
பித்தாலத் தங்கத்துக்குப் பித்தாசை கொள்ளலாமா?
கடலில் தலைமுழுகி கப்பலில் சிக்கு உலர்த்தி
ரெங்கத்துப் பூ ஒடிச்சு நேரவாடி பேசிப் போவோம் ..
கரை போட்ட கழுத்தழகி கடுக்கை போட்ட முகத்தழகி..
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே மின்னவாடி பேசிப் போவோம் ..
ஒத்தபனை சித்தநந்த ஒழுகு பனை ராமேஸ்வரம்
கும்பபனை அறியவேறு குயிலு இருந்தும் கூவாதோ..
சோட நந்த கண்மாய்க்குள்ள சோடி புறா மேயயிலே ..
சோடி பிரிஞ்சன்னைக்கு சோரவிட்டேன் கண்ணீரை ..
கம்மாய்க்குள் கழுகு மரம் கலந்து பேசி ஆறுமாதம் ..
சந்திக்கிற நேரமெல்லாம் சனியன் வந்து நேரிடுதே...
கொலவாலு நெல்லுகுத்தி கொலயாம சோறு பொங்கி
எலவாங்க போன மச்சான் எவளோட தாமுசமோ ..
ஆத்துக்குள்ள அஞ்சரளி அத்தை மவன் வச்சரளி ..
காக்கிதுல்ல பழுக்குதில்ல கவ்வோதிபய வச்சரளி ..
எண்ணெ தேச்சு தலை முழுகி நடுத்தெருவே போரவரே ..
வண்ணமிட்ட தலைபோல என் கண்ணைப் பறிக்குதய்யா ...
(மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மீனாள் (வயது 45) என்பவர் சொல்ல அதைப் பதிவு செய்தது திருச்சி பிஷப் ஹீபர்கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள்)
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications