மரித்துப் போன மனிதம்- க.மோகனரங்கன்
விஞ்ஞானம்
இந்த பூமி பிறந்து
இருநூறு கோடி
ஆண்டுகள் ஆனது
என்கிறது.
மூன்று கோடி
ஆண்டுகளுக்கு
முன் முதல் உயிர்
முளைத்தது..
குரங்கிலிருந்து
மனிதன் தோன்றியது
35 இலட்சம்
ஆண்டுகளுக்கு முன்தான்.
மனிதனுக்கு
முன் இவ்வுலகில்
பல உயிர்கள் தோன்றி
மறித்தன
ஆனால்..
மனிதனைப் போல்
எவையும் வாழ்ந்ததில்லை.
ஆறாவது அறிவு
மனித வளர்ச்சிக்காகவா..
வீழ்ச்சிக்காகவா...
மனிதனை தவிர
எந்த உயிரும்
இந்த பூமியை
கூறு போடவில்லை..
மனிதனைத் தவிர
எந்த உயிரும் தன்னை
இனம், ஜாதி, மதங்களால்
பிரித்துக் கொள்ளவில்லை
மனிதனை தவிர
எந்த உயிரும் அணுகுண்டு
கண்டுபிடித்து..
தன் இனத்தை
அழித்துக் கொள்ளவில்லை.
மனிதன்
நிலங்களை வேலியிட்டு
சொந்தமாக்கினான்..
ஆனால்..
அவன் உயிரை
அவனுக்கு
சொந்தமாக்க முடியவில்லை
எல்லாம் தனக்கென்று
எண்ணும் அவன்..
ஆறடி நிலமின்றி
மின் அடுப்பில் சாம்பலாகுகிறான்.
தவறுகளை கண்டு மனிதன்
வருந்துவதில்லை
தப்பிவிட்டால் மகிழ்கிறான்.
மாட்டிவிட்டால்
யுத்திகளை மாற்றி தவறுகளை
தொடர்கிறான்..
பொய் இன்று
புத்திசாலித்தனம்..
ஏமாற்றுவது திறமை..
அடிமைப்படுத்துவது
தலைமைக்கான தகுதி..
சுயநலம் மனித
உடலின் குருதி..
நேர்மை காட்சியகத்திற்கு
செல்ல வேண்டியவர்களின்
சொத்து
உண்மை கல்லறைக்குள்
சென்றவர்களின்
உடமை..
மனிதம்
மனிதனிடம் மறித்துப் போனது..
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications