அழகிய தீயே..
Subscribe to Oneindia Tamil
அவசர அவசரமாய்
என் கை தொட்டுப்போன
உன் கனவுகளை தேடிக்கொண்டிருக்கிறேன்..
சரிந்து விழுகின்ற தாவணியை
நீ சரி செய்யும் போதெல்லாம்
இடிந்து போகிறது என் இளமை..
ஜன்னலோர உன் மின்னல் பார்வையில்
உயிரெங்கிலும்
ஒன்பது உலகம் சுற்றும்..
நீ நகம் கடிக்கும் போது
என் உயிர் மெல்ல கூசும்..
வீணையாய் மெல்ல அதிரும்
உன் கொலுசின் ஓசை
வேனிலாய் இதழோரம்
விரியும் உன் புன்னகை..
எல்லாமே சேர்ந்து
கட்டிபோட்டுவிட்டது உனக்குள்
என்னை ஆயுள் கைதியாய்..!!
நீதான் என்றும் எனக்குள்
நிரந்தரமென்று நினைப்பதை மறப்பதற்குள்
நீ வேறு நான் வேறென்று..
முகம் தெரியாத எவனுக்கோ
கழுத்தை நீட்டி
முடிவுரை எழுதினாயே.. நம்
முதல் காதலுக்கு...!!???
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications