கண்டுகொண்டேன்.
Subscribe to Oneindia Tamil
உன்
நிமிடப்பார்வையில் தான்
நிகழ்ந்தது
அந்த விபரீதம்..
உன்
நெகிழ்ந்த புன்னகையில் தான்
நிகழ்ந்தது
அந்த விபத்து..
உன்
நெருடலான பேச்சில்தான்
நிகழ்ந்தது
அந்த விளையாட்டு..
உன்
வெட்கத்தின் விளிம்பில் தான்
விஸ்வரூபமெடுத்தது
அந்த விபரம்..
உன்
தீண்டலின் திரைமறைவில் தான்
தெரிந்தது
அந்த திரைப்படம்..
உன்
உரசலின் உற்சாகத்தில் தான்
உண்டானது
அந்த உணர்வு..
கடைசியாய் கண்டுகொண்டேன்
அது காதல்..!!












Click it and Unblock the Notifications