கனிந்து வரும் காலம்- அக்னிப்புத்திரன்
தம்பியே
தங்க நிகர்
தம்பியே!
தரணி
புகழ வேண்டும்
உன்னையே!
காடையர்களும்
கடைந்தெடுத்த
கயவர்களும்
காட்டிடுவர்
தனது கயமையை!
தூற்றிடுவர்
உனது திறமையை!
ஏற்றத்தை
ஏற்கமுடியாமல்
எள்ளி நகைத்திடுவர்!
வம்பர்கள்
வசை பாடியே
வாய் கிழியப் பேசிடுவர்!
அன்பர்கள்
ஆலகால விஷத்தையே
அமுதமாகக் கொட்டிடுவர்!
பொறுக்க இயலாமல்
பொல்லாங்கு பேசியே
பொழுதை கழித்திடுவர்!
தன் தளர்ச்சியை மறைக்க
அடுத்தவர் வளர்ச்சியைத்
தடுக்கத் தவியாய்த் தவிப்பர்!
தம்பியே
தங்க நிகர் தம்பியே!
தடைகளைத் தகர்த்து எறியடா!
உருவாகும் வியூகங்களை
உடைத்துக் கொண்டு
உள்ளே போடா!
துடைத்தொழியடா
துயரங்களை!
அழித்துக் காட்டிடுடா
அவலங்களை!
சாதித்துக் காட்டிடுடா
சாகஸங்களை!
அறிவுக்கு ஆணையிடு
அகிலம் அவசர அவசரமாய்
உன் அருகில் வரும்!
புத்தாக்கச் சிந்தனைகள்
பூத்துக் குலுங்கிட
படைத்துக் காட்டிடுடா
பலரும் உன்னைப் பாராட்ட!
பகைவர்கள் பதுங்கிக்கொள்வர்
எக்காளமிட்ட எதிரிகளோ
எடுத்திடுவர் ஓட்டம்!
புறம் பேசியே
புலம்பித் திரிந்த கூட்டம்
புறமுதுகை காட்டியே ஓடிடும்!
பணிந்து நட
துணிந்து செல்
கனிந்து வரும் காலம்!
- அக்னிப்புத்திரன் ([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications