அயல் தேசத்து அடையாளங்களாய்...- அனந்த்
கூரைக்கு மேலே வானம் இருப்பது தெரியாமல்
வாரங்கள் சில சத்தமின்றி கடந்து போகும்
திருட்டு விசிடியிலும் காண சகியா திரைப்படங்கள் இங்கே
சனி/ ஞாயிறுகளின் வெறுமை தொலைப்பதற்காய்...
வறண்ட வாரங்களின் இரண்டு தினங்களுக்காய்
சுருண்டு கொண்ட, சபிக்கப்பட்டதான ஒரு வாழ்க்கை.
மாதம் இருமுறை ஏதோ ஒரு
இந்திய உணவு சாலையில்
இரண்டு மாதங்களுக்கொருமுறை...கூட்டாஞ்சோறு
யாருக்கோ பிறந்த நாளாம்...
சந்திக்கும் இடமெல்லம் சலிப்பில்லாமல் அதே கேள்வி
மீண்டும்...மீண்டும்
ஏப்பா.....பச்சை அட்டையின் பயணம்
பாதையில எங்கெருக்கு?
ஏதோ சொர்க்கத்தில் இவரிடத்தை அது
முன் பதிவு செய்திடும் போல்...
எப்போதேனும் நிகழக்கூடும்
சில தொலைபேசி அதிர்வுகளுக்காய்
எங்கோ வெகு தொலைவில் உயிர் தாங்கிச் சில
முதுமைப் பறவைகள்.
வெறுமை என்னதான் இருந்தாலும்
பெருமை என்னவோ இருக்கத்தான் செய்கிறது
ஏதோ சாதித்துவிட்டதாய் இவர்களுக்கும்
அயல் தேசத்தில் பிள்ளை ஆண்டு வருவதாய் அவர்களுக்கும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications