எனக்கென்ன முதல் முறையா
Subscribe to Oneindia Tamil
எனக்கென்ன இது முதல் முறையா
பலர் வீசும் கற்கள்
குறிதவறி வீழ்வது என்மீதாய்
சில நேரம் தவறாத குறியாய்
வலிகளும் காயங்களும்
எனெக்கென்ன
இது முதல் முறையா
விழும் கற்களை பிடித்து
திருப்பி எறியத்
தெரிவதில்லை
இல்லை
திருப்பி எறிய மனமில்லை
காயங்களும் வலிகளும்
என்னோடு போகவென்று
விழும் கற்கள் தமை
வெகுவாக தாங்குகிறேன்.
பழகிப்போன சில காயங்களை
என் நண்பனாய் காண்கிறேன்
காயங்கள் ஆறிப் போனால்
ஒரு வெற்றுலகுள் விழுகிறேன்
என் காயங்கள் ஆறவிடாமல்
குத்திக் கிழிக்கும்
காக்கைகளை
விரட்டுவதா
இல்லை பாராட்டுவதா
தெரியாமல் தவிக்கிறேன்,.....
இந்த வலியும் தவிப்பும்
எனக்கென்ன முதல்முறையா !!! .












Click it and Unblock the Notifications