நீ வேண்டும்
நிசப்தமான நள்ளிரவுகளில்
மெளனத்தின் தனிமையில்
உன்னைத்தேடி கதறும் குரல்
உனக்கு கேட்கின்றதா....
உன் தோள்பிடித்து
எழ வைக்கிறாய்- -பின்
தூர சென்று
அழ வைக்கிறாய்
எனக்கென எழும்பும்
முதல் கரவொலி
உனக்கே உரிமையானது
என்னுள் எழும்வலி
உனக்கு மட்டுமே
சாத்தியமானது!
ஒரு குழந்தையென
அள்ளியெடுத்து என்னை
உச்சிமுகரும் வேளையில்
என் கர்வத்தை
உன் காலடியிலிட்டு
சிதைத்துவிடுகிறாய்!
தனிமை சுடுகிறது
என் சகியே
உன் உள்ளங்கைக்குள் எனக்கொரு
உலகம் செய்துவிடு!
உன்
கருவறையில் மீண்டும்
உருத்தரிப்பேனென்றே கர்த்தன்
வாக்களித்தால் இப்பொழுதே
இந்த உயிர்
விட்டுவிடுவேன்!
- பாஷா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications