தீர்மானிக்கப்படவில்லையெதுவும்
தீர்மானிக்கப்படவில்லையெதுவும்
தற்செயலாகவே நிகழ்ந்திருக்கவேண்டும்
முந்தும் எந்தை
விந்தணுக்களில் என்
சகதுளிகள் பின்தங்கியதால்
நானென்பது தீர்மானமாயிற்று!
தீராத வினைகள் தொட்டதில்லை
தீயெனை சுடும்விதி எட்டவில்லை
காலமெனது இருப்பை
தன்மேல் தாங்கி வருகிறது!
தரித்திரம் துடைக்க
சரித்திரம் படித்து
அரிதாரம் பூசி
விற்பனை பிரதிநிதியாய்
வீதிதோரம் அலைந்த நாட்களும்
தீர்மானிக்கப்பட்டதல்ல!
பத்து பொருத்தங்கள் பொருந்தி
பித்தனாய் எனை இருத்தி
மத, ஜாதி, உட்பிரிவு, முறையென
ஒன்றிலும் பிறழாமல்
அறியப்படாதவளாயினும்
அவள் விரல் பிணைத்து
அக்கினி வலம் வந்த நிமிடங்களும்
தீர்மானிக்கப்பட்டதல்ல!
அற்பாயுளில் அன்பு மனைவி செல்ல
அமெரிக்க டாலர்களுக்கு
அடிபணிந்தே ஒரு மகனும் பிரிய
சாய்வு நாற்காலியிலமர்ந்தபடி
விட்டம் பார்த்த தனிமையில்
சுவற்று பல்லிக்கு
சொல்லிகொண்டிருக்கும் இந்த
கவிதையும் தீர்மானிக்கப்பட்டதல்ல!
- பாஷா([email protected])
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications