கடைசி காதலி
Subscribe to Oneindia Tamil
வேதங்களால் சொல்லப்படாத
வாக்கியம் நீ -- என்
வேதனைகளை கேட்கும்
வாசகனும் நீ!
மதங்களால் அறியப்படாத
தெய்வம் நீ -- என்
மனதுக்குள் நடமாடும்
தேவனும் நீ!
வானின் கீழில்லா
கானம் நீ -- என்
இரணத்தில் பிறக்கும்
வேதனையும் நீ!
வானவில்லாய் நான்சொல்ல
வளைந்தவன் நீ -- நான்
கானம் கேட்டால் உன்
கதவடைத்தவனும் நீ!
இதிகாசங்களில் இல்லாத
பாத்திரம் நீ -- நான்
எழுதுகோளின்றி எழுதிய
சாத்திரமும் நீ!
பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கும்
பிரியம் நீ -- உன்னை
கைதொழும் பரிமாணத்தின்
கடைசி காதலி நான்!
- பாஷா([email protected])












Click it and Unblock the Notifications