மெளனமே

Subscribe to Oneindia Tamil

மெளனமே....
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்
மெளனம் கலையக் கலைய
வாழ்க்கை கலைந்து போகிறது

மெளனம் கலையக் கலைய
உணர்வுகள் உதிர்ந்து போகின்றன

மெளனம் கலையக் கலைய
அர்த்தமான அத்தனையும்
அனர்த்தமாகிச் சிதைகின்றன

மெளனம் கலையக் கலைய
உயரே உயர்ந்த மதிப்பீடுகள்
மெல்ல மெல்ல சரிகின்றன

மெளனம் கலையக் கலைய
உதடுகளை உதிர்த்துவிட்டு
விழிகள் ஊமையாகின்றன

முத்தத்திலும்
நான்கு உதடுகளும்
ஒரு யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும்
மெளன முத்தமே மிக அழுத்தமானது

மெளன ரதங்களில்தான்
காதல் கற்பிழக்காமல்
உலா விருகிறது

மெளன முறங்களால்தான்
துயரம் துரத்தப்படுகிறது

மெளனச் சுவர்களால்தான்
பல யுத்தங்கள்
துவங்கப்படாமலே இருக்கின்றன
மெளன மூலிகைதான்
மனக்காயங்களின் மருந்தாகிறது

மெளனத் தழுவல்களில்தான்
அன்பு விரிந்து பரவுகிறது

மெளன மத்தியில்தான்
மனச்சாட்சியே விழித்திருக்கிறது

மெளனமே
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+