போராட்டம்
காணாமற் போய்
கன காலத்தின் பின்
நாமிருவரும்
சந்தித்துத் கொண்டோம்.
உன்னை நோக்கி
எனது -ஆயுதமும்
என்னைக் குறிவைத்து
உனது -ஆயுதமும்
நீண்டிருந்த ஒரு பொழுதில்
நாமிருவரும்
சந்தித்துக்கொண்டோம்.
இருவர் உடலிலும்
ஓடும் ரத்தம்
தமிழ் ரத்தம் தானென்று
ஐயமில்லாத போதிலும்,
-ஆணைகளை நிறைவேற்ற
-ஆயுதங்களைத்
தயாராய் வைத்திருந்தோம்.
யார் முதலில்
விசையிழுத்து
வெற்றி கொள்வதென்று
புரியாத போராட்டம்
எம்மிருவருக்குள்ளும்.
இப்போதுதானா
பாழாய்ப்போன
பாடசாலை ஞாபகங்கள்
வந்து தொலையவேண்டும்!
அடக்குமுறைக்கெதிராய்
-ஆர்ப்பாட்டம் நடத்தினதும்,
இரவோடிரவாய்
இராணுவ முகாமுக்கு
கல்லாலெறிந்ததுவும்,
தாயகம் காக்க
நான் முந்தி
நீ பிந்தி
கணாமற்போனதுவுமென
ஞாபகங்கள்
இப்போதுதானா
வந்து தொலைக்கவேண்டும்?
விடுதலைப்போரில்
இணைந்துகொண்டாலும்
இருவரும் வேறாய்;
எனக்கு நீயும்
உனக்கு நானும்
துரோகிகளாகவா
சந்திக்கவேண்டும்?
உன்கையில்
தாழும் சுடுகலன்கள்
தயக்கத்தைச் சொன்னாலும்
பற்றியிருந்த கைகள்
உறுதியைச் சொல்லின.
நானும்தான்
என்னதை
இன்னும்
இறுக்கமாகப் பற்றுகிறேன்.
சிலநிமிடநேரப்
போராட்டத்தின் பின்
புரிந்து போகின்றது!
உன்னால் என்னையோ
என்னால் உன்னையோ
சுட்டுவிட முடியாது
இன்னொருத்தர் வந்து
இருவரையும் சுடும்வரை
காத்திருக்கின்றோம்.
காணாமற் போய்க்
கனகாலத்தின் பின்
நாமிருவரும்
சந்தித்துக்கொண்டோம்.
சந்தித்த பொழுதில்
இன்னும் மிச்சமிருந்தது
நட்பா? கொள்கையா?
மனப்போராட்டம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications