வறுமையின் வாசல்
Subscribe to Oneindia Tamil
பள்ளிக்கூடம் கனவாச்சு
பாதைமாறி வந்தாச்சு
துள்ளியாடி மகிழ்ந்ததெல்லாம்
தூளியோட தொலைஞ்சுபோச்சு...!
என்வயது பிள்ளையெல்லாம்
எழுதுகோல் கைப்பிடிக்க
என்கைகள் உளிபிடிக்கும்....
இன்றுஇரவு பசிபோக்க.!
பிஞ்சுவிரல் கல்லுடைக்க
பெத்தமனம் பேதலிக்கும்
வறுமையின் வலியோடு
அத்தனையும் மறந்துபோகும்...
கண்ணோடு கனவுகள்
காத்திருக்க....
உடைபடும் கற்களில் ஒன்றாவது
வறுமையின் வாசலை
அடைத்துவிட்டு செல்லுமோ?
வருங்காலம் என்னவென்று
சொல்லிவிட்டு போகுமோ?!












Click it and Unblock the Notifications