கல்லறைப் பூக்கள்
Subscribe to Oneindia Tamil
தென்றல் உரச
தேகம் சிலிர்க்கும்!
மொட்டு மலர
மோகம் துளிர்க்கும்!
வண்டு பருக
வானம் கண்சிமிட்டும்!
பருவம் எனைத்தீண்ட
கனவுகள் பூப்பூக்கும்!
என்வாழ்க்கை........
செடியோடு உறவாடி
மண்ணோடு மறைந்திடுமோ?
கூந்தலில் அசைந்தாடி
குப்பையில் போய்விடுமோ?
கோவிலில் அமர்ந்து
கொலுவாக ஆகிடுமோ?
ஆசையில்லை அத்தனையும்.....
என் கனவு.......!
உயிர்துறந்த ஊனுடல்
மண்ணோடு மறைந்தபின்னும்.....
மணம்வீசி பூத்திருப்பேன்....
உன்மீது நான்......
கல்லறைப் பூக்களாய்.....!












Click it and Unblock the Notifications