பெருமிதம்
Subscribe to Oneindia Tamil
அவமானப்படுத்தப்பட்டு
ஊர் திரும்பிய
அனுபவம் உண்டெனினும்
பட்டணம் குறித்த பெருமிதம்
மேலோங்கித்தான் இருக்கிறது
கிராமத்து மக்களுக்கு
என்றோ ஒரு காலத்தில்
தங்களுக்கு நேர்ந்த
பட்டணத்து அனுபவங்களை
அவ்வவ்போது கூடி அமர்ந்து
கூட்டியும் குறைத்தும்
சலிப்பின்றி பரிமாறிக் கொள்கிறார்கள்
மணிக் கணக்கில்.
சில சமயங்களில்
கிராம எல்லையில்
ஒருவனுக்கு
நான் சொல்லும் விடை
அடுத்த சில நிமிடங்களில்
கிராமம் முழுவதும் பரவி
மரியாதை தொனிக்க
எதிரொலிக்கிறது
பட்டணத்துல இருந்து
வந்தது நீங்க தானா
என்று.
எப்படிப் புரிய வைப்பது
இவர்களுக்கு
பட்டணத்திலிருந்து
வந்திறங்கும் எவரும்
கிராமத்திலிருந்துதான்
பட்டணத்துக்குப் போனார்கள்
என்பதை.












Click it and Unblock the Notifications